ஒரே கிளாஸ்.. 15 வயது பிஞ்சுகள்.. வீட்டை விட்டு ஓடிப்போன 4 "மாணவிகள் ".. லெட்டரில் இருந்த ஷாக் காரணம்!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்; தெலுங்கானாவில் ஒரே வகுப்பில் படிக்கும் 4 மாணவிகள் திடீரென வீட்டை விட்டு ஓடிப்போன சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அவர்கள் எழுதி வைத்து இருக்கும் கடிதம்தான் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் 4 மாணவிகள்தான் இப்படி காணாமல் போய் உள்ளனர். 4 பேரும் ஒரே வகுப்பில் 10வது படித்துள்ளனர்.

இவர்கள் மைனர் என்பதால் பெயர்கள் வெளியிடப்படவில்லை. வகுப்பிலும் எப்போதும் ஒன்றாக இருப்பது, ஒன்றாக டியூஷன் செல்வது என்று இவர்கள் நெருக்கமாக இருந்துள்ளனர்.

நெருக்கம்

நெருக்கம்

இந்த நான்கு மாணவிகளும் வகுப்பில் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர். ஒன்றாக படிப்பது, ஒன்றாக முடிந்து செல்வது என்று நெருக்கமான தோழிகளாக இருந்துள்ளனர்.இந்த நிலையில் இதில் ஒரு மாணவி நெற்றி மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வரவில்லை. அவரை தேடி மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து அவர் எப்போதோ கிளம்பி சென்றுவிட்டார் என்று கூறி உள்ளனர்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இதையடுத்து மாணவி படிக்கும் டியூஷனுக்கு சென்றுள்ளனர். அங்கும் மாணவி வரவில்லை என்று கூறி உள்ளனர். அந்த மாணவி மற்ற தோழிகளுடன் நட்பாக இருப்பதால் ஒரு தோழியின் வீட்டிற்கு போன் செய்து விசாரித்து உள்ளனர். அங்கு விசாரித்ததில் அந்த மாணவியும் கிளாஸ் முடிந்து வீட்டிற்கு வரவில்லை என்று தெரிய வந்துள்ளது. இரண்டு மாணவிகளின் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சந்தேகம்

சந்தேகம்

இதையடுத்து சந்தேகம் அடைந்த அவர்கள் மற்ற மாணவிகள் எல்லோரின் பெற்றோருக்கும் போன் செய்து விசாரித்து உள்ளனர். பள்ளி நிர்வாகமும் இது தொடர்பாக விசாரணை செய்து உள்ளது. விசாரணையில் மாணவிகள் 4 பேர் மொத்தமாக காணவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் வீட்டில் சொல்லாமல் எங்காவது ஓடி இருக்கலாம் அல்லது கடத்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

போலீசார் நேற்று இரவோடு இரவாக சக மாணவிகளிடம் விசாரணை செய்துள்ளனர். அதேபோல் அந்த மாணவிகள் டியூஷன் செல்லும் இடங்களிலும் விசாரணை செய்துள்ளனர். ஆனால் அதில் எதிலும் சந்தேகம் அடைய கூடிய விதத்தில் எந்த சம்பவமும் நடக்கவில்லை. இந்த நிலையில்தான் மாணவிகளின் வீடுகளில் இருந்து போலீசார் 4 கடிதங்களை கைப்பற்றி உள்ளனர். அதில் மாணவிகள் தாங்கள் வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டதாக எழுதி உள்ளனர்.

கடத்தல் இல்லை

கடத்தல் இல்லை

எங்களை யாரும் கடத்தவில்லை. கவலைப்பட வேண்டாம். நாங்கள் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டோம். எங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நாங்கள் வாழ்க்கையில் நல்லபடி வர நினைக்கிறோம். அதுவரை எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கடிதம் எழுதிவிட்டு அவர்கள் வீட்டில் இருந்து ஓடி உள்ளனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கடிதம் உண்மையில் மாணவிகள் மூலம் எழுதப்பட்டதா என்று விசாரணை செய்து வருகின்றனர். அதோடு அவர்களை கண்டுபிடித்து குடும்பத்திடம் மீட்டு கொடுப்பதற்காகவும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+