தெலுங்கானா.. முனுகோடு சட்டசபை இடைத்தேர்தல்.. ஆளும் டிஆர்எஸ் கட்சி அபார வெற்றி.. பாஜக தோல்வி!
ஹைதராபாத்: முனுகோடு சட்டசபை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி இதில் பாஜகவை வீழ்த்தி 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முனுகோடு சட்டசபை தொகுதிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் இடைத்தேர்தல் நடைபெற்றது. அங்கு காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்தவர் கோமதி ரெட்டி ராஜகோபால ரெட்டி.
முன்பு எம்பியாக இருந்தவர் 2018 சட்டசபை தேர்தலில் அந்த தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ ஆனார்.

தேர்தல்
கடந்த ஆகஸ்ட் மாதம் இவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இதன் காரணமாகவே அங்கு தற்போது சட்டசபை இடைத்தேர்தல் வந்து உள்ளது. இங்கு காங்கிரஸ் சார்பாக பல்வாய் ஸ்ரவந்தி ரெட்டி நிறுத்தப்ப்ட்டார். அதேபோ டி ஆர் எஸ் கட்சி சார்பாக குஷுகுந்தல பிரபாகர் ரெட்டி நிறுத்தார். இவர் இதற்கு முன் ராஜ்கோபால் ரெட்டியிடம் 2018 சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இடைத்தேர்தல்
பாஜக சார்பாக ராஜகோபால் ரெட்டி அங்கு களமிறக்கப்பட்டார். இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 47 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தெலுங்கானா மாநிலத்தை உலுக்கிய மிக முக்கியமான இடைதேர்தலாக இது பார்க்கப்பட்டது. அடுத்த வருடம் அங்கு நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டம் போல இந்த இடைத்தேர்தல் பார்க்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலுக்காக பல கோடி ரூபாய் பணம் செலவு செய்யப்பட்டதாக புகார்கள் வைக்கப்பட்டன.

ஆர் .கே நகர்
தமிழ்நாட்டில் நடைபெற்ற ஆர்.கே நகர் தேர்தல் போல மிகவும் விறுவிறுப்பாக இந்த தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்றன. முக்கியமாக பாஜகவிற்கு - தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும் இடையில் இந்த தேர்தல் நேரடி மோதலை ஏற்படுத்தியது. ராஜகோபால ரெட்டி முக்கியமான தலைவர் என்பதால் பாஜகவிற்கு இங்கு வெற்றி வாய்ப்புகள் இருந்தன. அதேபோல் டிஆர்எஸ் கட்சி ஆளும் கட்சி என்பதால் குஷுகுந்தல பிரபாகர் ரெட்டிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருந்தன.

முன்னிலை
இந்த நிலையில் தற்போது அங்கு குஷுகுந்தல பிரபாகர் ரெட்டி டிஆர்எஸ் கட்சி சார்பாக காலையில் இருந்து முன்னிலை பெற்று வந்த நிலையில் 12 சுற்றுக்கு பின் வெற்றிபெற்றார். பாஜக வேட்பாளரை விட கிட்டத்தட்ட 7000 வாக்குகள் அதிகம் பெற்று இவர் வெற்றி பெற்றுள்ளார். குஷுகுந்தல பிரபாகர் ரெட்டி டிஆர்எஸ் கட்சி சார்பாக 81,825 வாக்குக்காகள் பெற்றுள்ளார். பாஜக ராஜகோபால ரெட்டி 74,225 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையில் நெக் டூ நெக் மோதல் நிலவி வந்த நிலையில் 12 சுற்றுக்கு பின் டிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications