அள்ள அள்ள தங்கம், கட்டுக்கட்டாக பணம்.. கோடிகளை குவித்த பெண் தாசில்தார்.. மலைத்துப்போன போலீஸ்
ஹைதராபாத்: அள்ள அள்ள தங்கம், எடுக்க எடுக்க சொத்து பத்திரமும், கட்டுக்கட்டாக பணமும் சிக்கியிருக்கிறது ஒரு பெண் தாசில்தார் வீட்டில்.. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தாசில்தார் வீட்டை அந்த மாநில லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்திய போது சுமார் 3.2 கோடி ரூபாய் மதிப்புள்ள கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கரீம்நகர் ஜம்மிகுண்டா மண்டல் தாசில்தார் மற்றும் இணைப் பதிவாளராக இருந்த மார்கலா ரஜனி ஊழல் புகாரில் சிக்கியதற்காக அவர் மீது அந்த மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மார்கலா ரஜனியின் வீடு மற்றும் அவரது உறவினர்கள், கூட்டாளிகள் மற்றும் பினாமி என்று சந்தேகப்படும் நபர்களின் வீடுகளுக்குச் சொந்தமான 5 இடங்களில் புதன்கிழமை அன்று தெலுங்கானா மாநில ஏசிபி போலீசார் சோதனை நடத்தினார்கள்..

இந்த சோதனையில் கணக்கில் வராத ரொக்கப்பணம் ரூபாய் 1.5 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வங்கி கணக்கில் 25.70 லட்சம் இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் 1462 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்கள், ரூ.9 லட்சம் மதிப்புள்ள வீட்டுப் பொருட்கள், 31 லட்சம் மதிப்புள்ள கார் உள்ளிட்ட வாகனங்கள், 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 7 ஏக்கர் விவசாய நிலம், ரூ.21 லட்சம் மதிப்புள்ள 22 வீட்டு மனை ஆவணங்கள் மற்றும் 50 லட்சம் மதிப்பிலான மூன்று சொத்துகளை வாங்கியதற்கான முன்பண ஒப்பந்த ஆவணங்கள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெண் தாசில்தார் மார்கலா ரஜனி வீட்டில் போலீசார் பறிமுதல் செய்த நிலத்தின் ஆவணங்கள் எல்லாம் சந்தை மதிப்பின்படி கூறப்பட்டவை. ஆனால் உண்மையில் சொத்து மதிப்பு பல கோடிகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் தெலுங்கானா மாநில போலீசார் வெளியிட்ட படி பார்த்தாலே மொத்த சொத்து மதிப்பு சுமார் 3 கோடியே 20 லட்சத்து 16 ஆயிரத்து 915 ஆகும்.

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு ஏற்கனவே ஒரு பெண் தாசில்தார் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார். ஹைதராபாத் நகரில் அரசு கட்டுமான பணி டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரரிடம் ரூ.84,000 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி ஜகஜோதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அப்போது கைது செய்தனர். இதையடுத்து ஜகஜோதி வீட்டிற்கு சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.

அதில் கணக்கில் வராத ரூ.65 லட்சம் ரொக்கம், 3.64 கிலோ எடை கொண்ட தங்க நகைகள், சில சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். ஜகஜோதிக்கு ஏராளமான ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் உள்பட சுமார் ரூ.15 கோடியில் சொத்துகள் இருப்பது அப்போது தெரிய வந்தது. கையும் களவுமாக மாட்டிக்கொண்ட அவர் அப்போது தெலுங்கானா மாநிலத்தில் பெரிய அளவில் பேசுபொருளானார். அந்த வரிசையில் கரீம்நகர் தாசில்தாரான மார்கலா ரஜனியும் சிக்கி உள்ளார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications