பாஜகவில் கிளம்பிய புயல்! அடுத்தடுத்து ஆளுநர்களாகும் சீனியர்கள்? தெலுங்கானாவிற்கு போகும் முக்கிய தலை?
சென்னை: 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில் விரைவில் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் பலர் ஆளுநர் ஆக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தானில் பாஜக வென்றுள்ளது. அதே சமயம் தெலுங்கானாவிலு, மிசோரமிலும் பாஜக தோல்வி அடைந்துள்ளது. இதில் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.

இன்று பதவி ஏற்கிறார்; தெலங்கானா முதலமைச்சராக இன்று பதவி ஏற்கிறார் ரேவந்த் ரெட்டி. காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க உள்ளனர்.
தெலுங்கானாவின் 119 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தெலுங்கானாவில் பெரும்பான்மைக்கு தேவை 61 இடங்கள்.
தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான சிபிஐ 1 இடத்தில் வென்றது. ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சி 39 இடங்களில்தான் வென்றது. இதனால் ஆட்சியை காங்கிரஸிடம் பிஆர்எஸ் கட்சி பறிகொடுத்தது.
பாஜக நிர்வாகிகள்: 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில் விரைவில் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் பலர் ஆளுநர் ஆக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. தமிழ்நாட்டில் சில பாஜக நிர்வாகிகளுக்கு ரிட்டயர்மெண்ட் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இருந்த எல். முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்ட பின் கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின்பாக தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.அண்ணாமலையின் நியமனத்திற்கு பின் கட்சியில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. பல இளைஞர்களுக்கு முக்கிய பொறுப்புகள், பல்வேறு அணி தலைவர் பதவிகள் வழங்கப்பட்டன.
சீனியர்கள்: இன்னொரு பக்கம் பாஜகவில் சீனியர்களாக இருந்த பல்வேறு தலைவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். முக்கியமாக எல் . முருகனுக்கு முன்பாக தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட தமிழிசை தூத்துக்குடியில் தோல்வி அடைந்த பின் 2019ல் தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இவர் ஆளுநர் ஆன பின் எல் முருகன் தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து தமிழ்நாடு பாஜகவில் மூத்த தலைவராக வலம் வந்த முன்னாள் தலைவர் இல கணேசன் 22ம் தேதி ஆகஸ்ட், 2021 அன்று மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். முன்னதாக மேற்கு வங்க ஆளுநராக இல கணேசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். அதன்பின் இவருக்கு வழங்கப்பட்ட மேற்கு வங்க ஆளுநர் கூடுதல் பொறுப்பு நீக்கப்பட்டது. மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் தற்போது நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சிபிஆர்: தமிழ்நாடு பாஜக தலைவராக முன்பு இருந்தவர் சிபி ராதாகிருஷ்ணன். இவரின் பெயர் மீண்டும் தமிழ்நாடு பாஜக தலைவருக்கான லிஸ்டில் அடிபட்டு வந்தது. தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் இவரின் பெயரும் மீண்டும் தலைவருக்கான லிஸ்டில் அடிபட்டது. கடந்த 2 மாதங்களாக தமிழ்நாடு பாஜகவில் பிரச்சனைகள் நிலவி வருகின்றன. திருச்சி சூர்யா - டெய்சி விவகாரம், காயத்ரி ரகுராம் விவகாரம், அலிஷா விவகாரம் என்று பல்வேறு விவகாரங்கள் சர்ச்சையாகின. இந்த நிலையில்தான் சிபி ராதாகிருஷ்ணன் மீண்டும் தலைவராக போவதாக செய்திகள் உலாவ தொடங்கின.
இந்த நிலையில்தான் தற்போது ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் பதவி என்பது அரசியலில் இருந்து வழங்கப்படும் ரிட்டயர்மெண்ட் போன்றது ஆகும். ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுக்கி தள்ளாமல் அவர்களுக்கு மரியாதையாக வழங்கப்படும் ரிட்டயர்மெண்ட் ஆகும். அந்த வகையில் தற்போது ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓரம்கட்டப்படும்: முன்னாள் தலைவர்களால் தமிழ்நாட்டில் பாஜகவை 5 சதவிகித வாக்குகளுக்கு மேல் கொண்டு செல்ல முடியாத நிலையில்தான் தற்போது மூத்தவர்கள் மொத்தமாக ஓரம் கட்டப்பட்டு இளையவர்கள் உள்ளே கொண்டு வரப்பட்டு உள்ளனர். அண்ணாமலை, அமர் பிரசாத் ரெட்டி, அலிஷா அப்துல்லா, நிர்மல் குமார், போன்ற இளம் அரசியல் புள்ளிகள் பாஜகவில் கவனம் பெற தொடங்கி உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவில் முக்கிய புள்ளிகளாக இருந்தவர்களில் எச். ராஜா, வானதி சீனிவாசன் மட்டுமே தற்போது கட்சி அரசியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா மாற்றம்: இந்த நிலையில்தான் தற்போதய லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையிலும்... சிலரை தமிழ்நாட்டில் ஓரம்கட்டும் வகையிலும்.. 5 மாநில தேர்தலுக்கு பின்பாக ஆளுநர்களை மற்றும் வகையில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படலாம் என்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து பாஜக நிர்வாகிகள் சிலர் ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி வந்ததை அடுத்து தமிழிசை நீக்கப்பட்டு வலுவான பாஜக நிர்வாகி ஒருவர்.. விரைவில் அங்கே ஆளுநராக நியமிக்கப்படலாம்.. தமிழிசை புதுச்சேரி துணை நிலை ஆளுநராக மட்டுமே நீடிப்பார் என்று தகவல்கள் வருகின்றன.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications