Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேறு பெண்ணுடன் “உல்லாசம்”.. கணவனை கட்டிப் போட்டு மனைவி செய்த ”வேற லெவல்” சம்பவம்! அதிர்ந்த போலீசார்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத் : மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த மருத்துவராக பணியாற்றும் கணவனை, உறவினர்களுடன் சென்று அடித்து துவைத்து பெண் ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது.

தெலுங்கான சூர்யாபேட்டையை சேர்ந்த மருத்துவர் பானு பிரகாஷ் கடந்த சில வருடங்களுக்கு முன் பிரியங்கா என்ற இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தின் பொது நகைகள் பணம் என வரதட்சணையைத் தவிர, பானு பிரகாஷுக்கு பிரியங்கா பெயரில் இரண்டு வீடுகளையும் அவரது பெற்றோர் பரிசாக அளித்துள்ளனர்.

ஏமாற்றிய மருத்துவர்

ஏமாற்றிய மருத்துவர்

திருமணத்தின் அடையாளமாக இரண்டு குழந்தைகளை பெற்ற நிலையில், அதன்பின், கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதாவது தான் மருத்துவமனை கட்ட மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதோடு, இரண்டு பிள்ளைகளின் தாயான தன் மனைவியை இரக்கமின்றி தனியே விட்டுச் சென்றுள்ளார் பானு பிரகாஷ். இதையடுத்து மனைவி பிரியங்கா தனது கணவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

தான் திரும்பி வர வேண்டும் என்றால் கூடுதல் வரதட்சணை தரும்படி கணவர் பானு பிரகாஷ் துன்புறுத்துவதாக மனைவி பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார். இருவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படுவதற்கு முன்பு, அவரது கணவர் பானு பிரகாஷ் மற்றொரு பெண்ணான தேவிகாவை மறுமணம் செய்து கொண்டார். இது சட்டப்படி குற்றம் என பிரியங்கா கூறியும் இதனை கண்டு கொள்ளாமல் பானு பிரகாஷ் இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.

கணவன் மீது தாக்குதல்

கணவன் மீது தாக்குதல்

இந்நிலையில் ஐதராபாத்தில் வசித்து வந்த பானுபிரகாஷ், சில காலம் ஹைதராபாத் மருத்துவமனைகளில் பணியாற்றிய நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு சூர்யாபேட்டைக்கு வந்து குடியேறினார். இதையறிந்த முதல் மனைவி தனது உறவினர்களுடன் சென்று பானு பிரகாஷையும், இரண்டாவது மனைவி தேவிகாவையும் தாக்கியுள்ளனர். பானு பிரகாஷ் மற்றும் அவரது இரண்டாவது மனைவி தேவிகாவை கைகளை கட்டியதோடு அவர்கள் அழுவதை கண்டு கொள்ளாமல் கடுமையாக தாக்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தெலுங்கானாவில் பரபரப்பு

தெலுங்கானாவில் பரபரப்பு

மேலும், தனக்கும் தன் இரு குழந்தைகளுக்கும் அநீதி இழைத்த கணவன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சுகமாக வாழ்வதாகவும், இதனை கேட்டால் அடித்து துன்புறுத்துவதாகக் கூறி இருவரையும் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். தனக்கும் தன் குழந்தைகளுக்கும் நீதி வேண்டும் எனக் கூறி, அவர்களை போலீசிடமும் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+