இரும்பு மாதிரி.. திடகாத்திரமாக இருந்த மனுசன்.. கோட்டா சீனிவாச ராவிற்கு என்ன ஆனது? பின்னணி!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில் காலமானார்.

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த ஜூலை 11 வியாழக்கிழமை அதிகாலை இவரின் உடல்நிலை மிக மோசமான நிலையில், 83 வயதில் காலமானார். ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் அதிகாலை 4 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hyderabad

தென்னிந்திய சினிமாவில் மிகவும் மதிக்கப்படும் மற்றும் பல்துறை நடிகர்களில் கோட்டா சீனிவாச ராவ் ஒருவர். 40 வருடங்களுக்கும் மேலாக திரையுலக வாழ்க்கையில், 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது தனித்துவமான குரல், வசன உச்சரிப்பு மற்றும் வலிமையான திரை பிரசன்னம் மூலம் ஒரு வலுவான முத்திரையை பதித்துள்ளார். நகைச்சுவை, வில்லன் அல்லது குணச்சித்திர வேடங்கள் என எதுவாக இருந்தாலும், அனைத்தையும் சமமான திறமையுடன் செய்தார். பத்மஸ்ரீ மற்றும் பல நந்தி விருதுகள் உட்பட முக்கியமான பல விருதுகளை அவர் பெற்றுள்ளார். ஒருமுறை எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றியுள்ளார்.

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு

நடிகர் கோட்டா சீனிவாச ராவ் கடந்த சில நாட்களாக கடுமையாக உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டார். அதிலும் கடுமையாக இவரின் உடல்நிலை மோசமாகி, உடல் மெலிந்து பாதிக்கப்பட்டார். சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் அதன்பின் வீட்டிலேயே வைத்து சிகிச்சை பெற்று வந்தார்.

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில் காலமானார். கடந்த வியாழக்கிழமை அவரின் உடல்நிலை மிக மோசமாக மாறிய நிலையில், சிகிச்சை பலனின்றி பலியானார்.

ஆந்திர பிரதேச முதல்வர் சந்திர சேகர ராவ் போஸ்ட்

பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் மறைவுக்கு ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "நான்கு தசாப்தங்களாக சினிமா மற்றும் நாடகத் துறைகளுக்கு அவர் ஆற்றிய கலைப் பங்களிப்புகள் மற்றும் அவர் சித்தரித்த கதாபாத்திரங்கள் மறக்க முடியாதவை. வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் அவர் நடித்த எண்ணற்ற மறக்கமுடியாத கதாபாத்திரங்கள் சினிமா பார்வையாளர்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு சினிமா திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. 1999-ல் விஜயவாடாவிலிருந்து எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்று பொதுமக்களுக்கு சேவை செய்தார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

திரைக்கு அப்பால், கோட்டா சீனிவாச ராவ் தனது தனிப்பட்ட ஒழுக்கம், நேர்மை மற்றும் கலை மீதான அன்புக்காக பாராட்டப்பட்டார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகம் மற்றும் அவரது எண்ணற்ற ரசிகர்கள் அவரது இழப்பால் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். தலைமுறை தலைமுறையாக திரைப்பட ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய அந்த ஜாம்பவானை நினைவுகூர்ந்து பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+