ஸ்பாவுக்கு 16 வயது ஆந்திர சிறுமியை அழைத்து வந்த சித்தி.. அதிர்ந்த சென்னை.. யார் அந்த அரசு அதிகாரி?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திரா சித்தி செய்த வேலையை பார்த்தீங்களா? ஏற்கெனவே தாய், தந்தையை இழந்து ஆதரவின்றி தவித்த சிறுமியின் வாழ்க்கையில், அவரைப் பாதுகாக்க வேண்டியவர்களே எதிரிகளாக மாறியிருக்கிறார்கள்.. இப்போது சித்தி, சித்தப்பா 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.. விசாரணை நடக்கிறது.. இதில் வெளியாகும் ஒவ்வொரு தகவல்கள் போலீசாரையே அதிர வைத்துள்ளன.. அப்படி என்ன நடந்தது?

ஆந்திராவை சேர்ந்த அந்த சிறுமிக்கு அம்மா, அப்பா 2 பேருமே இறந்துவிட்டார்கள்.. அதனால் சித்தியின் பாதுகாப்பில் சிறுமி இருந்து வந்தார். இந்த சூழலைப் பயன்படுத்திக்கொண்ட சித்தியும், அவரது கணவரும், சிறுமியைப் பாலியல் கும்பலிடம் ஒப்படைத்து பணம் சம்பாதித்திருக்கிறார்கள்..

Andhra Minor Girl Spa Case

முதலில் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள ஸ்பாவில் வேலை செய்ய வைத்துள்ளார்.. ஆனால் அங்கு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.. இதற்கு பிறகு பெங்களூருவில் உள்ள ஸ்பா மையங்களுக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.. அங்கிருந்து கேரளாவிலுள்ள கோவளம் பகுதியிலுள்ள ஸ்பாவுக்கு அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கியிருக்கிறார்கள்..

கோவளம் ஸ்பா

அந்த கோவளத்திலுள்ள ஸ்பா ஒன்றில் சிறுமி தங்கியிருந்தபோதுதான், அங்கு கஸ்டமராக வந்த இளைஞர் ஒருவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது... அங்கு நடக்கும் கொடுமைகளை எல்லாம் அந்த இளைஞரிடம் சொல்லி சிறுமி அழுதுள்ளார்..

பிறகு அங்கிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்றும் சொல்லி கேட்டுள்ளார்.. சிறுமி மீது இரக்கப்பட்ட அந்த இளைஞரும், உதவி செய்ய முன்வந்தார்.. இறுதியில் இளைஞரின் உதவியுடன் சிறுமி அந்த ஸ்பாவிலிருந்து ரகசியமாக வெளியேறி விட்டார்.

சித்தி சித்தப்பா

இதனிடையே, சிறுமியை காணவில்லை என்று சித்தியே போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து கோவளம் போலீஸார் சிறுமியைத் தேடிக் கண்டுபிடித்தனர்.

மறுபடியும் சித்தியிடம் ஒப்படைக்க முயன்றபோதுதான், சிறுமியிடம் 2 ஆதார் அட்டைகள் இருப்பதை போலீசார் கவனித்தனர். இரண்டிலும் வயது தொடர்பான விவரங்கள் வேறு வேறு மாதிரியாக இருந்தது.. அதாவது ஒன்றில் 16 வயது என்றும், இன்னொரு ஆதார் கார்டில் 20 வயது என்றும் இருந்துள்ளது.. இதனால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டு, மகளிர் போலீஸார் சிறுமியிடம் தனியாக விசாரித்தனர்... அப்போதுதான், சித்தியும் சித்தப்பாவும் பணத்துக்காக ஆசைப்பட்டு பாலியல் கும்பலிடம் ஒப்படைத்திருப்பது தெரியவந்தது..

யார் அந்த அரசு அதிகாரி

உடனே கோவளம் காவல் நிலைய ஆய்வாளர் வி.எம். ஸ்ரீகுமார், நிலையப் பொறுப்பு அதிகாரி ஷீனா தலைமையிலான தனிப்படை போலீஸார் உடனடியாகக் களமிறங்கினார்கள்..

தொழிச்சல், சப்பாத்து பகுதிகளில் "ஆயுர்கேரளா ஸ்பா" நடத்தி வந்த ஆலப்புழா நடுவேல்முறியைச் சேர்ந்த சஜித் குமார் (47), கோவளம் அவாடுதுறையில் "ட்ரீம்ஸ் ஸ்பா" நடத்தி வந்த பூவாரைச் சேர்ந்த நிஷாந்த் (46) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த சிறுமியின் சித்தி, அவரது கணவரையும் ஆந்திராவுக்கு சென்ற தனிப்படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அதுமட்டுமல்ல, அரசு அதிகாரி ஒருவருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் கிளம்பி உள்ளது.. அதனால் அந்த கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

ஆபரேஷன் ஸ்பா - அதிரடி

இந்த சம்பவம் கேரளா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. பி. விஜயன் உத்தரவின்பேரில் 'ஆபரேஷன் ஸ்பா' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது.

கேரளாவில் செயல்படும் 821 ஸ்பாக்களில் ஒரே நாளில் 586 மையங்களில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். விதிமீறல்கள் தொடர்பாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, கோவளத்தில் லைசென்ஸ் இல்லாமல் இயங்கிய 8 ஸ்பாக்களுக்கு சீல் வைக்கப்பட்டது. அரசு வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத 44 ஸ்பாக்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது..

16 வயது சிறுமியை, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என 3 மாநிலங்களுக்கும் சித்தி, சித்தப்பா அழைத்து சென்று, பாலியல் தொழிலில் தள்ளி பணம் சம்பாதித்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+