பல்வேறு அறிவிப்புகள்.. செங்கோட்டையில் பிரதமர் உரை - Live

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் 72வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தி வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி ஆற்ற உள்ள உரையை அதிக மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக கூகுள் மற்றும் யுடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Aug 15, 2018, 8:58 am IST

பெண்கள் நலன் குறித்து பிரதமர் மோடி உரை

முஸ்லீம் பெண்களுக்கு பெரும் அநீதி முத்தலாக் - மோடி பேச்சு

முத்தலாக் நடைமுறையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை

சிலர் எதிிர்த்தாலும் முஸ்லீம் பெண்களுக்கு நியாயம் கிடைக்க செய்வோம்- மோடி

சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக அதிகப்படியான பெண் அமைச்சர்கள் இந்த அரசில் பதவி வகிக்கிறார்கள்

சுப்ரீம் கோர்ட்டில் ஒரே நேரத்தில் பெண் 3 நீதிபதிகள் பணியாற்றுகிற்றுகிறார்கள்-மோடி

வந்தே மாதரம் கூறி பிரதமர் மோடி தனது உரையை நிறைவு செய்தார்

Aug 15, 2018, 8:53 am IST

தமிழக அரசின் நல் ஆளுமை விருதுகள் அறிவிப்பு

சென்னை அண்ணா பல்கலை. வான்வெளி ஆய்வு நிறுவனமான தக்ஷா குழுவுக்கு அப்துல் கலாம் விருது

தமிழக அரசின் சிறந்த துறைகள்- பதிவுத்துறை, உணவுத்துறை,சுகாதாரத்துறை

சிறந்த மாநகராட்சி : உள்ளாட்சி அமைப்புக்களில் சிறந்த மாநகராட்சியாக திருப்பூர் தேர்வு

சிறந்த நகராட்சி : கோவில்பட்டி, கம்பம், சீர்காழி

சிறந்த பேரூராட்சி : சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம், பழனிசெட்டிபட்ட, பாலக்கோடு 3வது பரிசும்

கல்பனா சாவ்லா விருது : கட்டையால் சிறுத்தையை விரட்டிய கோவை முத்துமாரி தேர்வு

Aug 15, 2018, 8:49 am IST

ஊழலையும், கருப்பு பண முதலைகளையும் நாங்கள் சும்மா விடமாட்டோம்-மோடி

டெல்லி வீதிகளில் இப்போது 'பவர் புரோக்கர்கள்' குரல் ஓய்ந்துவிட்டது- மோடி

பவர் புரோக்கர்களுக்கு பதில் ஏழைகளின் குரல்தான் இப்போது அரசால் கேட்கப்படுகிறது

நலத்திட்ட உதவிகளுக்கான பணம் போலியான கரங்களுக்கு சென்றது நிறுத்தப்பட்டுள்ளது-மோடி

உண்மையான பலனாளிகளுக்குதான் இப்போது பணம் சென்று சேருகிறது-மோடி

முறைகேடாக சென்று கொண்டிருந்த ரூ.90,000 கோடி பணத்தை தடுத்து நிறுத்தியுள்ளோம்

Aug 15, 2018, 8:49 am IST

நியாயமாக வரி செலுத்துவோரால்தான் இந்த நாடு வளர்ந்து வருகிறது

ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்த வரி பணம் பயனாகிறது-மோடி

பலாத்கார மனநிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும்-மோடி

மத்திய பிரதேசத்தில் பலாத்கார குற்றவாளிக்கு விரைவு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

சட்டமே உயர்ந்தது, யாரும் சட்டத்தை கையில் எடுக்க கூடாது

Aug 15, 2018, 8:47 am IST

மருத்துவ காப்பீடு திட்டத்தால் 10 கோடி குடும்பங்களை சேர்ந்த 50 கோடி மக்கள் பலன் பெறுவார்கள்

மருத்துவ காப்பீடு திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும்

Aug 15, 2018, 8:31 am IST

2022ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு இந்தியர்கள் அனுப்பப்படுவார்கள்-மோடி

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் பற்றி பிரதமர் உரையில் தகவல்

2022ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாக்கப்படும்-மோடி உரை

விவசாயத்தையும், விஞ்ஞானத்தையும் இணைத்து வெற்றி பெறுவதே இந்த அரசின் நோக்கம்-மோடி

Aug 15, 2018, 8:31 am IST

இந்தியாவை எதிர்ப்போருக்கு துல்லிய தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்துள்ளோம்- மோடி

பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் செப்டம்பர் 25ம் தேதி முதல் செயல்படுத்தப்படும்-மோடி

பிரதான் மந்த்ரி ஜன் ஆரோக்யா அபியான் என்ற பெயரில் காப்பீடு

ஏழைகளும் சிறந்த மருத்துவ சேவையை பெற இந்த திட்டம் உதவும்- மோடி உரை

Aug 15, 2018, 8:19 am IST

டெல்லியிலிருந்து வடகிழக்கு இந்தியா துண்டிக்கப்பட்டதை போன்ற தோற்றம் இருந்தது

எங்கள் அரசு வட கிழக்கு இந்தியாவின் வாசலுக்கு டெல்லியை கொண்டு சென்றுள்ளது-மோடி உரை

சாலை, வான், கடல்வழிகளில் தன்னிறைவு அடைந்துள்ளோம்

புதிய பகுதிகளில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன

Aug 15, 2018, 8:18 am IST

சுய வேலைவாய்ப்புக்கான முத்ரா திட்டத்தில் 13 கோடி பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது

உலக அளவில் முன்பு இந்தியாவுக்கு அடைக்கப்பட்ட கதவுகள் இப்போது திறந்துள்ளன

புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியா மந்தமான நாடு என உலக நாடுகள் எண்ணியிருந்தன

இப்போது இந்தியாவின் தாரக மந்திரம் reform, perform மற்றும் transform என மாறிவிட்டது

Aug 15, 2018, 8:06 am IST

சுதந்திர தின உரையில் முந்தைய அரசுகளை தாக்கிய மோடி

கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா பல துறைகளிலும் அசுர வளர்ச்சி-மோடி

2013ல் குறைந்த வேகத்தில் கழிவறை கட்டப்படுவது, மின்மயமாக்கல் இருந்தன-மோடி

அதே வேகத்தில் பணிகள் தொடர்ந்திருந்தால் அதை முடிக்க பல தசாப்தம் தேவைப்பட்டிருக்கும்-மோடி

Aug 15, 2018, 8:06 am IST

இந்தியர்கள் புதிய அரசை மட்டும் தேர்ந்தெடுக்கவில்லை, தேச கட்டுமானத்தில் மக்கள் பங்கு பெற்றுள்ளனர்-மோடி

அனைவருக்குமான இந்தியாவை உருவாக்க வேண்டியுள்ளது-மோடி

பேரிடர் காலங்களில் கருணையுடனும், எதிரிகளுடன் ஆக்ரஷோத்தோடும் உள்ளனர் இந்திய ராணுவத்தினர்

ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு ஒத்துழைத்த வணிகர்களுக்கு எனது நன்றி-மோடி உரை

Aug 15, 2018, 7:54 am IST

நாட்டின் பல பகுதிகளிலும் நல்ல பருவமழை பெய்துள்ளது

இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு துணை நிற்க வேண்டும்

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்

அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனம் சமூக நீதியை நிலைநாட்டுகிறது-மோடி பேச்சு

அரசியல் சாசனத்தின் வழி நின்று அனைத்து தரப்பு மக்கள் வளர்ச்சிக்கும் நடவடிக்கை-மோடி

எல்லையிலுள்ள ராணுவ வீரர்களுக்கு நாட்டு மக்கள் ஆதரவாக உள்ளனர்

Aug 15, 2018, 7:45 am IST

சுதந்திர தின உரையில் பாரதியார் பாடலை தமிழில் பேசி குறிப்பிட்டார் மோடி
Aug 15, 2018, 7:44 am IST

நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களுக்கு தலை வணங்குகிறேன்: மோடி உரை

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை அரசு மீட்டுள்ளது: மோடி

12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் நீலகிரியில் தற்போது மலர்ந்துள்ளன

புதிய வளர்ச்சிகளை நோக்கி நாடு முன்னேறுகிறது-மோடி உரை

உலகின் 6வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியுள்ளது-மோடி

Aug 15, 2018, 7:40 am IST

நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து உரையை ஆரம்பித்தார் பிரதமர் மோடி
Aug 15, 2018, 7:36 am IST

செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி உரை ஆரம்பம்
Aug 15, 2018, 7:36 am IST

தேசிய கொடியேற்றியபோது 21 குண்டுகள் முழங்கப்பட்டன
Aug 15, 2018, 7:31 am IST

செங்கோட்டையில் மூவர்ண கொடியேற்றினார் பிரதமர் மோடி

தேசிய கீதம் இசைக்க தேசிய கொடிக்கு பிரதமர் மரியாதை

Aug 15, 2018, 7:24 am IST

செங்கோட்டையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் பிரதமர்
Aug 15, 2018, 7:21 am IST

செங்கோட்டை வந்தடைந்தார் பிரதமர் மோடி

சற்று நேரத்தில் தேசியக்கொடியேற்றி வைத்து உரையாற்றுகிறார்

Aug 15, 2018, 7:20 am IST

டெல்லியிலுள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை

மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு செங்கோட்டை வருகிறார் மோடி

Aug 15, 2018, 7:09 am IST

முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா, மன்மோகன்சிங் செங்கோட்டை வருகை
Aug 15, 2018, 6:58 am IST

5வது முறையாக சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார் பிரதமர் மோடி

பொதுத் தேர்தலுக்கு முந்தைய உரை என்பதால் மக்களிடையே எதிர்பார்ப்பு

Aug 15, 2018, 6:56 am IST

செங்கோட்டைக்கு அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வருகை
Aug 15, 2018, 6:55 am IST

பிரதமர் தேசியகொடியேற்ற உள்ள டெல்லி செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு
Aug 15, 2018, 6:50 am IST

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+