For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆண்பிள்ளைகளுக்கு ஒழுக்க நெறியை கற்றுக்கொடுங்கள்: பிரதமர் மோடி அறிவுரை!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்துகின்றன என்று வேதனை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, பெற்றோர்கள் பெண் குழந்தைகளைப் போல ஆண் பிள்ளைகளுக்கும் ஒழுக்க நெறியைக் கற்றுக்கொடுத்து கட்டுக்கோப்பாக வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

டெல்லி செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

பாலின விகித ஏற்றத்தாழ்வு

பாலின விகித ஏற்றத்தாழ்வு

நமது நாட்டின் பாலின விகிதத்தை பார்த்திருக்கிறீர்களா? யார் இந்த ஏற்றத்தாழ்வை உருவாக்கியது கடவுள் இல்லை. பெண் குழந்தைகளை கருவறையிலே மருத்துவர்கள், பெற்றோர்கள் கொல்ல வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.

கருவிலேயே சமாதி

கருவிலேயே சமாதி

மகன் வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் பெண் குழந்தையை கொல்ல வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துக் கொள்கிறேன். பெண் குழந்தைகளை கருவறையிலே கொல்லாதீர்கள்.

கனவை நிறைவேற்றுங்கள்

கனவை நிறைவேற்றுங்கள்

பெண் குழந்தைகளின் கனவை நிறைவேற்ற வேண்டும்.அவர்கள் 21ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் ரத்தம்.

ஒரு பெண் செய்வாள்

ஒரு பெண் செய்வாள்

நான் நிறைய குடும்பங்களை பார்த்திருக்கிறேன். 5 ஆண் மகன் சேர்ந்து ஒரு குடும்பத்திற்கு என்ன நன்மை செய்து விடுவார்களோ அதைவிட அதிகமாக ஒரே ஒரு பெண் பிள்ளை செய்து காட்டியதை நேரடியாக பார்த்திருக்கிறேன்.

தேசத்திற்கு பெருமை

தேசத்திற்கு பெருமை

நமது விளையாட்டு வீரர்கள் நம் தேசத்திற்கு நிறைய பெருமை சேர்த்துள்ளனர். அவர்களில் நிறைய பெண்களும் இருக்கின்றனர்.

ஒழுக்க நெறி

ஒழுக்க நெறி

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்துகின்றன. மகள்களை போல் மகன்களையும் பெற்றோர்கள் கட்டுக்கோப்பாக வளர்க்க வேண்டும்.

ஆணுக்கு ஒரு நியதியா?

ஆணுக்கு ஒரு நியதியா?

பெற்றோர்களாக நாம் நம் பெண் பிள்ளைகளிடம் பல கேள்விகள் கேட்கிறோம். ஆனால் எப்போதாவது ஆண் பிள்ளையிடம் எங்கே போகிறாய் என கேட்டிருக்கிறோமா? பெண் பிள்ளைகளுக்கு விதிக்கும் ஒழுக்க நெறி கட்டுப்பாடுகளை ஏன் நாம் ஆண் பிள்ளைகளுக்கு விதிப்பதில்லை?

சட்டம் கடமையைச் செய்யும்

சட்டம் கடமையைச் செய்யும்

குற்றங்கள் நடைபெறும் போது சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும். ஆனால் நாமும் நமது மகன்கள் நேர்வழியில் செல்வதை உறுதி செய்ய வேண்டும்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

English summary
Have we seen our sex ration? Who is creating this imbalance in society. Not Almighty. I appeal to doctors not to kill the girl child. I appeal to parents not to sacrifice the girl child. I have seen families where 1 daughter served parents more than even 5 sons
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X