பாருங்க! 15 வாட்ச்மேன் பணியிடத்திற்கு 11,000 இளைஞர்கள் விண்ணப்பம்! லைனில் இன்ஜினியர்கள், பட்டதாரிகள்
போபால்: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வேலையின்மை என்பது தீராத தலைவலியாக உள்ளது. அதுவும் கொரோனா ஊரடங்குக்கு பிறகு நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகரித்து விட்டதாக பல்வேறு புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
இந்த புள்ளி விவரங்கள் உண்மைதான் என்பதை மத்திய பிரதேசம் நிரூபித்துள்ளது. அந்த மாநில அரசு தேர்வுத்துறை குவாலியர் பகுதியில் பியூன்கள், டிரைவர்கள் மற்றும் காவலாளிகளுக்கான 15 பணியிடங்களை நிரப்புவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

15 பணியிடங்களுக்கு 11,000 இளைஞர்கள் திரண்டனர்
10-ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில் வெறும் 15 பணியிடங்களுக்கு 11,000 இளைஞர்கள் விண்ணப்பங்களுடன் திரண்டனர். 10-ம் வகுப்பு படித்தவர்கள் போதும் என்ற நிலையிலும், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், என்ஜினீயர்கள், எம்பிஏ படித்தவர்கள், சிவில் நீதிபதி ஆர்வலர்கள் என மெத்த படித்தவர்களும் விண்ணப்பங்களுடன் திரண்டு வந்தனர்.

பாஜக ஆளும் மாநிலம்
இதில் கொடுமை என்னவென்றால் மத்திய பிரதேசம் மட்டுமில்லாது அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில் இருந்தும் இளைஞர்கள் திரண்டு வந்ததுதான். இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். விண்ணப்பிக்க வந்தவர்களின் ஒருவரான அஜய் பாகேல் என்பவர் ''நான் அறிவியல் பட்டதாரி, நான் பியூனுக்கு விண்ணப்பித்துள்ளேன். பிஎச்டி படித்தவர்கள் இங்கே வரிசையில் உள்ளனர்'' என்று மாநிலத்தின் வேலையின்மையை வெளிச்சம் போட்டு காட்டினார்.

1 லட்சம் அரசுப் பணியிடங்கள்
மத்தியப் பிரதேசத்தில் சுமார் 1 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக இருந்தாலும், சுமார் 32 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலையில்லாமல் உள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில் 30,600 காலி பணியிடங்கள், உள்ளாட்சித் துறையில் 9,388 , சுகாதாரத் துறையில் 8,592, வருவாய்த் துறையில் 9,530 என்று காலி பணியிடங்கள் நீண்டு கொண்டே செல்கிறது. குறைந்த ஊதியத்தில் கிடைக்கும் அரசு வேலைகளுக்கு கூட ஆயிரக்கணக்கானோர் வருவதற்கு இதுவே காரணம் என்று வேலை தேடுபவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

95 பேர் தற்கொலை
சமீபத்தில் மத்திய பிரதேச அரசின் தெருவோர வியாபாரிகள் திட்டத்திற்கு சுமார் 15 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 99,000 பேரில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் பட்டப்படிப்பு முடித்தவர்கள். கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் மட்டும் வேலையின்மை காரணமாக 95 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications