For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி மேற்பார்வை குழு உத்தரவு எதிரொலி.. பெங்களூரில் 15 ஆயிரம் போலீசார் குவிப்பு! போலீஸ் வார்னிங்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில், தமிழகத்திற்கு 10 நாட்கள் தினமும் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில், பெங்களூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் இன்று எடுக்கப்பட்ட முடிவுப்படி, தமிழகத்திற்கு வரும் 21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும் 3,000 கன அடி தண்ணீரை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கூட்டம் நடைபெற்றதால், பெங்களூரில் இன்றே காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவிரி மேற்பார்வை குழு உத்தரவால் கர்நாடகாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதையடுத்து பெங்களூர் போலீசார் பொதுமக்களுக்கு சில கோரிக்கைகளை விடுக்க தொடங்கியுள்ளனர்.

15K police personal deployed 2 maintain peace tranquillity in Bengaluru

இதுதொடர்பாக பெங்களூர் போலீசார் வெளியிட்டுள்ள சில டிவிட்: சமூக வலைத்தளங்களில் தூண்டுதலுக்குரிய வகையில் காவிரி பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரில் பந்த் போன்ற நிலை காணப்படவில்லை. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் அமைதி நிலவுகிறது. போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அவசர உதவிக்கு 100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

ஆயுதப்படை , ரிசர்வ் படை வீரர்கள் உட்பட, பெங்களூரில் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் அதிரடி விரைவுப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

English summary
15K police personal including civil,CAR,KSRP, & CPMF are deployed 2 maintain peace tranquillity in Bengaluru.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X