பெண் போலீசாரின் தலைமுடியை பிடித்து, இழுத்துத் தாக்கிய டிவி நடிகைகள்... வழக்குப் பதிவு!
மும்பை: பெண் போலீசாரின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கிய டி.வி. நடிகைகள் இரண்டு பேர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பை அந்தேரி லோகண்ட்வாலா பகுதியை சேர்ந்த டி.வி. நடிகைகள் பூஜா மிஸ்ரா, சுருதி குப்தா. கடந்த திங்கட்கிழமை அன்று இரவு 1 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இந்த நடிகைகளை, அந்தேரி மேற்கு லிங்ரோடு பகுதியில் காரில் வந்த இரண்டு இளைஞர்கள் ஆபாச சைகைகள் காட்டி கிண்டல் செய்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பூஜாவும், சுருதியும் அந்த இளைஞர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே ரோந்து வந்த டி.என்.ஆர். நகர் போலீசார், அருகில் சென்று இருதரப்பிடமும் விசாரணை நடத்தினர். டி.வி. நடிகைகளும், இளைஞர்களும் ஒருவர் மீது ஒருவர் மாற்றி மாற்றி புகார் கூறியதால், நான்கு பேரையும் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அங்கு, தங்களுக்கு தொல்லைக் கொடுத்த இளைஞர்களை மட்டுமல்லாது, தங்களையும் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வந்திருப்பதாக டிவி நடிகைகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, விசாரணை செய்து கொண்டிருந்த பெண் போலீசாரின் தலை முடியை இழுத்து நடிகைகள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் நடிகைகள் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனாஜி நலவாடே கூறுகையில், ‘‘போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. டி.வி. நடிகைகள் இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்'' என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications