For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

By Karthikeyan
Google Oneindia Tamil News

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் ஷோபியான் மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற ஹிஜ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த இருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள விகில் கிராமத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு ராணுவப்படையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

2 militants killed in kashmir

அப்போது அங்கு பதுங்கி தீவிரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இரு தரப்புக்கும் இடைய நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நீடித்தது. இறுதியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

உயிரிழந்த தீவிரவாதிகள் வாசீம் மல்லா, நஷீர் அகமது பண்டிட் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இவர்கள் ஹிஜ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அவர்களிடம் இருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் அகமது பண்டிட் முன்னாள் போலீஸ்காரர் என்பதும் அவர் கடந்த ஆண்டு மார்ச் 29-ந் தேதி அப்போதைய அமைச்சர் அல்தாப் அகமது புகாரி வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியதும் தெரியவந்தது. சோபியான் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைப்பெற்று வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
Two top Hizbul Mujahideen militants, including a former policeman, were killed on Thursday in a gunbattle with security forces in Shopian district of south Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X