வேலையை ஆரம்பித்தது பாஜக.. அயோத்தியில் ராமாயண மியூசியம் அமைக்க 20 ஏக்கர் நிலம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணிகைளை தொடங்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிபுரிந்து வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் அயோத்தி நகரில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.

20 acres land for Ramayana museum in Ayodhya

இதற்காக அம்மாநில அரசு 20 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளனர். இதற்கான உத்தரவை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளார்,

அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை தொடங்கவும் முதல்வர் ஆதித்யநாத் யோகி உத்தவிட்டுட்டுள்ளார். அகிலேஷ் தலைமையிலான அரசு அருங்காட்சியகம் அமைக்கும் பணியை கிடப்பில் போட்டு வைத்திருந்தது.

இந்நிலையில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலிள் அமர்ந்துள்ள பாஜக அரசு பதவியேற்ற ஒருவாரத்திலேயே ராமாயண அருங்காட்சியகத்தை தொடங்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
UP Chief minister Yogi adityanath has ordered to set up Ramayana museum in Ayodhya. 20 acres land offered for that.
Please Wait while comments are loading...