For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாபர் மசூதி இடிப்பு... லக்னோ தீர்ப்பு... ஒரு செய்தியாளரின் சில நினைவுகள்.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பாபர் மசூதி இடிப்பு நாள் மற்றும் இந்த வழக்கின் தீர்ப்பு நாளின் போது ஒரு செய்தியாளர் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் கட்டுரை இது..

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளன்று பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.. அப்போது மங்களூரில் இருந்தேன்.. திடீரென வன்முறை வெடித்தது.. இதனால் வீட்டுக்கு மீண்டும் திரும்பினேன்.. ஒருவழியாக 24 மணிநேரம் ஜனநெருக்கட்டியான ரயிலில் முட்டி மோதி ஏறி பெங்களூருக்கு பாதுகாப்பாக திரும்பினேன்...

22nd anniversary of Babri Masjid demolition: The nation has moved on

அதன் பின்னர் 18 ஆண்டுகள் கழித்து பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவது குறித்து செய்தி சேகரில்ல லக்னோ உயர்நீதிமன்றம் சென்றிருந்தேன்.. லக்னோவில் 2010 செப்டம்பர் 23-ந் தேதி சென்று இறங்கிவிட்டு உயர்நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருந்தேன்.. அப்போது வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தகவல் கிடைக்க மீண்டும் பெங்களூர் திரும்பினேன்..

இருப்பினும் உச்சநீதிமன்றம் 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி தீர்ப்பு வழங்கலாம் என அனுமதிக்க மீண்டும் லக்னோ பயணமானேன்.. லக்னோ தெருவெங்கும் போலீசார்.. 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குவிக்கப்பட்டிருந்தனர்..

காணும் திசையெங்கும் பாதுகாப்புப் படையினர்.. கடைகள் மூடப்பட்டிருந்தன.. என்ன மாதிரியான தீர்ப்பு வந்தாலும் எப்படியும் ஏதோ ஒரு பிரிவினர் வன்முறையில் இறங்கிவிடுவார்கள் என்பதுதான் அனைவரது கருத்தாக இருந்தது..

லக்னோ உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.. செய்தியாளர்கள் அனைவருமே ஒரு கிலோ மீட்டர் தொலைவு தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்தனர். வழக்கறிஞர்கள் வந்து தீர்ப்பின் விவரத்தை சொல்வதற்காக அனைவரும் காத்திருந்தோம்..

பிற்பகல் 2.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் கிடைத்தன.. ஆனால் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது பற்றி முழு விவரமும் கிடைக்கவில்லை.. ஒருவித பதற்றத்துடன் நின்று கொண்டிருந்தோம்..

அப்போது விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பைச் சேர்ந்த சில வழக்கறிஞர்கள் வெற்றி வெற்றி என்று இருவிரலை உயர்த்தியபடி எங்களை நோக்கி வந்தனர்.. அவர்கள் தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். கிடைத்த தீர்ப்பு விவரங்களை சேகரிப்பதில் மும்முரமாக இருந்தேன்..

ஆஹா.. எங்கேனும் வன்முறை வெடித்திருக்குமோ என்ற அச்சத்துடன் பார்த்தால்... மூடப்பட்ட கடைகள் திறக்கப்பட்டிருந்தன.. மக்கள் வழக்கம் போல அமைதியாக தங்களது வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.. எங்கும் பதற்றம்.. பரபரப்பு என்பது எதுவுமே இல்லை..

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது வன்முறை வெறியாட்டம் நிகழ்ந்த தெருக்கள்..அதே வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் முழுவதுமாக தலைகீழாக மாறிப் போயிருந்தது.. அப்போதுதான் இந்த தேசம் முன்னேறிவிட்டது.. என்ற நம்பிக்கையும் துளிர்த்திருந்தது..

English summary
So much has changed between December 6th 1992 and December 6th 2014. This is a day that is remembered for the demolition of the Babri Masjid and although it will remain in the memories of many for a long time, it would be safe to say that the nation has moved on.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X