For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியை மிரட்டும் டெங்கு... 11 பேர் பலி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்த 29 வயது பெண் ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து டெல்லியில் டெங்குவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

29-yr-old woman succumbs, dengue toll up to 11 in Delhi

டெல்லி மாநிலத்தில் கடந்த 2010ம் ஆண்டு நூற்றுக்கணக்கானோர் பலியான டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு டெல்லி மாநகராட்சி கடுமையான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது மீண்டும் கடந்த சில நாட்களாக டெல்லியைச் சேர்ந்த ஆயிரத்து 800 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

இதையடுத்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அனைத்து மருத்துவமனைகளும் அவசர கால நிலையில், பணிக்குத் தயாராக இருக்கும்படி டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி அரசு அதிகாரிகள், இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் கடந்த 12ம் தேதி வரை மொத்தம் 1872 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிக அதிகமாகும். காய்ச்சல் பரவுவதைத் தொடர்ந்து மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அரசு மருத்துவமனையில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பைத் தொடர்ந்து, டாக்டர்களின் விடுமுறையை அரசு ரத்து செய்துள்ளது. விடுமுறையில் இருக்கும் டாக்டர்கள் உடனே பணிக்குத் திரும்ப அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், நோயாளிகளுக்கு படுக்கைகள், மருந்து மாத்திரைகள் போன்றவற்றையும் தேவையான அளவுக்கு வைத்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.

டெல்லியில் டெங்குவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. எனினும் 5 பேர் மட்டுமே இறந்துள்ளதாக டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இதுவரை 1,872 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே டெங்கு காய்ச்சலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்கவில்லை என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

English summary
The toll from dengue here climbed to 11 today as one more death -- of a 29-year old woman -- was reported due to the vector-borne disease that has caused a widespread scare in the national capital. According to authorities at Lok Nayak hospital, the wom
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X