For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்த அதிரடி.. உத்தவ் தாக்ரே சரியில்லை.. கட்சி கொள்கையே போச்சு.. 34 சிவசேனா எம்எல்ஏக்கள் தீர்மானம்

Google Oneindia Tamil News

குவஹாத்தி: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அரசில் ஊழல் அதிகரித்துள்ளது; அதிகாரத்துக்காக சிவசேனாவின் அடிப்படை கொள்கைகளை நீர்த்து போக செய்து சமரசம் செய்துவிட்டார் உத்தவ் தாக்கரே என சரமாரியாக குற்றம்சாட்டி அதிருப்தி எம்.எல்.ஏக்க்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

Recommended Video

    Maharashtra Political Crisis | Uddhav Thackeray Speech | Shivsena

    மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக சிவசேனா எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கலகக் குரல் எழுப்பிய சிவசேனா எம்.எல்.ஏக்கள் தற்போது அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் முகாமிட்டுள்ளனர்.

    குவஹாத்தியில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கூட்டம், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 34 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    34 Shiv Sena Rebel MLAs pass resolution against Uddhav Thackeray Govt

    உத்தவ் தாக்கரே அரசின் ஊழல் பரவி இருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அமைச்சர் அனில் தேஷ்முக், நவாப் மாலிக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினரால் சிவசேனா தொண்டர்கள் அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர்.

    அதிகாரத்துக்காக, முரண்பாடான கொள்கை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சிவசேனாவின் அடிப்படை கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டதை ஏற்க முடியாது.

    2019-ம் ஆண்டு மக்கள் அளித்த தீர்ப்புக்கு முரணாக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸுடன் கை கோர்த்ததை ஏற்க முடியவில்லை. தொண்டர்களின் உணர்வுகளை கட்சி மேலிடம் உணர்ந்து கொள்ளவில்லை.

    இவ்வாறு சிவசேனா அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏக்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

    English summary
    34 Shiv Sena Rebel MLAs had passed resolution against Uddhav Thackeray lead Maharashtra Govt.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X