கொளுத்தும் வெயிலில் சுருண்டு விழுந்து 50க்கும் மேற்பட்டோர் பலி.. ஆந்திரா, தெலுங்கானாவில் கொடுமை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளால் தெலுங்கானாவில் 28 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதே போன்று ஆந்திர மாநிலத்தில் 20 பேர் வெயிலில் சுருண்டு விழுந்து மாண்டுள்ளனர்.

தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் கடும் வெயில் கொளுத்தி மக்களை வாட்டி வதைத்து வருகிறது, இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பம் இந்த இரு மாநிலங்களிலும் பதிவாகியுள்ளது.

கடந்த 17ம் தேதி 43 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது. இது கடந்த 10 ஆண்டுகளின் பதிவான வெப்பத்தைவிட அதிகபட்சமாகும்.

48 பேர் பலி

48 பேர் பலி

இந்த கோடையில் ஆந்திரா மாநிலத்தில் 20 பேரும், தெலுங்கானா மாநிலத்தில் 28 பேரும் சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வெப்ப நிலை இதே போன்று தொடர்ந்து அதிகரித்து வந்தால் இந்த இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

ஏப்ரல் 19-ம் தேதி வரை வெப்பக்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள போதிலும் அதையும் தாண்டி இன்றும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே தலை காட்டாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

ஒரு டிகிரி கூடுதல்

ஒரு டிகிரி கூடுதல்

இந்த ஆண்டு கோடையில் வழக்கத்தைக் காட்டிலும் ஒரு டிகிரி வெப்பம் கூடுதலாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியிருந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் இத்தனை உயிர் இரு மாநிலங்களில் பலியாகியுள்ளதால் அரசு பல எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

விழிப்புணர்வு பிரச்சாரம்

விழிப்புணர்வு பிரச்சாரம்

மே மாதமும் கடும் வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள ஆங்காங்கே விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெயிலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி, எது போன்ற உடைகள் உடுக்க வேண்டும், என்னென்ன குடிக்க வேண்டும் என்பது பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Heat stroke deaths in Telugu states has been put at 28 in Telangana and 20 in Andhra Pradesh.
Please Wait while comments are loading...