For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் கழிவறை இல்லாத வீடுகளில்கூட பாத்ரூம் இருக்கிறது: இது சென்சஸ் சுவாரசியம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் பாதி பேருக்கு மேல் வீட்டில் கழிவறை இல்லை என்ற அதிர்ச்சி தகவல் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் அம்பலமாகியுள்ளது.

இந்தியாவில் பத்து வருடங்களுக்கு ஒருமுறை மக்கள் தொகை மற்றும் அதை சார்ந்த புள்ளி விவரங்கள் கணக்கெடுக்கப்படுவது வழக்கம். 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் இதுவரை அரசின் திட்டங்கள் தீட்டப்பட்டு வந்தன. இந்நிலையில், 2011ம் ஆண்டின் மக்கள் தொகை விவரம் இன்று வெளியிடப்பட்டது.

53 சதவீதம் பேருக்கு கழிவறையில்லை

53 சதவீதம் பேருக்கு கழிவறையில்லை

அதில் பல சுவாரசிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. சுத்தம், சுகாதாரம் பற்றி வாய்கிழிய பேசும் இந்த நாட்டில், சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகாலம் ஆகியும், 53 விழுக்காடு பேருக்கு கழிவறை கிடைக்கவில்லை, அல்லது அவர்கள் அதை கட்டவிரும்பவில்லை என்ற தகவல் இந்த புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.

24 கோடி வீடுகளின் தேசம்

24 கோடி வீடுகளின் தேசம்

இந்தியாவில், மொத்தம், 19 கோடியே 19 லட்சத்து 63 ஆயிரத்து 935 வீடுகள் 2001ல் இருந்தன. 2011ல், வீடுகள் எண்ணிக்கை, 24 கோடியே 66 லட்சத்து 92 ஆயிரத்து 667-ஆக அதிகரித்துள்ளது. இதில் நகரங்களில் மட்டும், 7 கோடியே 88 லட்சத்து 65 ஆயிரத்து 937 வீடுகள் உள்ளன.

கிராமங்களில் மோசம்

கிராமங்களில் மோசம்

இந்தியாவில் 53.1 சதவீதம் வீடுகளில், அதாவது பாதிக்கும் சற்று மேல் வீடுகளில் கழிவறை கிடையாது. கிராமங்களை மட்டும் கணக்கில் எடுத்தால், இது 69.3 சதவீதமாக உள்ளது. அதாவது நூற்றுக்கு 30 பேர் வீட்டில்தான் கழிவறைகள் உள்ளன. அந்த வகையில் நகர்ப்புறங்கள் கொஞ்சம் பரவாயில்லை. நகரங்களில் 18.6 சதவீதம்பேர் வீட்டில் கழிவறைகள் இல்லை.

10 வருஷத்துக்கு பரவாயில்லை

10 வருஷத்துக்கு பரவாயில்லை

அதேநேரம், 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பார்த்தால், நிலைமை இதைவிட மோசமாக இருந்துள்ளது. அப்போது, இந்தியாவில் 63.6 சதவீதம் பேர் வீட்டில் கழிவறைகளே கிடையாது. நகரங்களிலும் கூட 26.3 சதவீதம் பேர் வீட்டில் கழிப்பிடம் இல்லாமல் இருந்தது. கிராமங்களில் அது 78 சதவீதமாக இருந்தது.

அதுக்கில்லை, இதுக்கு இருக்கு

அதுக்கில்லை, இதுக்கு இருக்கு

கழிவறை இல்லாவிட்டாலும், குளிக்கும் இடத்தை பெரும்பாலானோர் ஏற்பாடு செய்துகொண்டுள்ளனர் என்பதை புளளி விவரம் சொல்கிறது. 2011 கணக்கெடுப்புபடி, நாட்டில் பாத்ரூம் இல்லாதோர் எண்ணிக்கை 41.6 சதவீதம். கிராமங்களில் பாத்ரூம் இல்லாதோர் எண்ணிக்கை 55 சதவீதமாகவும், நகரங்களில் பாத்ரூம் இல்லாதோர் எண்ணிக்கை 13 சதவீதமாகவும் உள்ளது.

நாட்டை நாறடிக்காதீங்கப்பா

நாட்டை நாறடிக்காதீங்கப்பா

காலைக்கடனை முடிக்க, காட்டுப்பக்கம் செல்வது, தண்டவாளம் பக்கம் ஒதுங்குவது என்று பெரும்பாலானோர் இடம் பார்த்து வைத்துள்ளனர். ஆனால் குளிக்க வீட்டின் பக்கத்தில் ஏதாவது ஒரு மறைப்பை ஏற்பாடு செய்துவிடுகின்றனர் என்பதையே, பாத்ரூம்-கழிவறை வேறுபாடு காண்பிக்கிறது. எனவேதான் கழிவறையின்றி 53.1 சதவீதம்பேரும், பாத்ரூம் இல்லாதோர் 41.6 சதவீதம் பேரும் நம் நாட்டில் உள்ளனர்.

English summary
53.1 % house holds not having latrine facility within the premises, says 2011 census data.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X