• search

இந்த 7 காரணத்துக்காகவே.. கண்ணை மூடிக் கொண்டு ஓப்போ எஃப்7 போனை நீங்க வாங்கலாம்!

By Lakshmi Priya
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  டெல்லி: ஓப்போ நிறுவனத்தின் எஃப் 7 போனை அந்த நிறுவனம் கடந்த மார்ச் 26-ஆம் தேதி வெளியிட்டது. இந்த போனின் டிசைன் ஆகியன தவிர்த்து இதில் முழு அளவு ஸ்கிரீன் (நாட்ச் ஸ்கிரீன்) என்ற தொழில்நுட்பம் முக்கியமானது.

  அத்துடன் இதில் ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் (செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்) எனப்படும் குரலை அடையாளம் காணுதல், முடிவு எடுத்தல், மொழியாக்கம் செய்தல், வீடியோ காட்சிகளை உணர்தல் போன்ற செயலிகள் உள்ளன. மிகச் சிறந்த செல்பி கேமரா என்ற பெயரை பெற்றுள்ளது.

  7 Reasons Why You Should Own the OPPO F7 Right Away

  இந்த செல்போனை ஏன் வாங்க வேண்டும் என்பதற்காக கீழே 7 காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை காண்போம்.

  1. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட செல்பி கேமரா

  கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட போனை ஓப்போ நிறுவனம் உருவாக்கியது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட எஃப்7 போனில் 25 எம்பி கொண்ட முன் கேமரா(பிரண்ட் கேமரா) உள்ளது. இது மிக துல்லியமாக காட்சிகளை கொண்டிருக்கும். இதில் ஹை டைனமிக் ரேஞ்ச் எனப்படும் தொழில்நுட்பம் கொண்டுள்ளதால் குரூப்பாக செல்பி எடுக்கும் போது ஆண், பெண்களின் அழகை தனித்தனியே கூட்டுகிறது.

  7 Reasons Why You Should Own the OPPO F7 Right Away

  2. சூப்பர் புல் ஸ்கிரீன்

  ஓப்போ எஃப் 7 போனில் முத்லமுறையாக நாட்ச் ஸ்கிரீன் எனப்படும் பெரிய திரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஸ்கிரீனின் அளவு 6.2 இன்ச்கள் ஆகும். இந்த பெரிய திரையை கொண்டு கேம் விளையாடும் போது படிக்கும் போது நல்ல ஒரு அனுபவத்தை தரும். 2280 x 1080 ரெசொல்யூசன் என்பதுதான் நவீன செல்போனில் உயர்ந்ததாகும்.

  3.செயற்கை நுண்ணறிவு மூலம் போட்டோக்களை பயன்படுத்துதல்

  செயற்கை நுண்ணறிவு மூலம் இந்த ஓப்போ எஃப் 7 போன் குரூப் போட்டோக்களை முகங்கள், இடங்கள், காட்சிகள் ஆகியவற்றை தானாக அடையாளம் காணும். அதுமட்டுமல்லாது போட்டோக்களை பார்ப்பதற்காக தனித்தனியாக ஆல்பங்களை அதாகவே உருவாக்கிக் கொள்ளும். இதில் ஸ்ப்லிட் ஸ்கிரீன் டிஸ்ப்ளேயும் உள்ளதால் வாடிக்கையாளர் தங்களுக்கு பிடித்தமான செயலிகளை வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் முக்கிய சந்திப்புகள், திட்டங்கள், பயணம், சினிமா செல்வது உள்ளிட்டவை வாரியாக பிரித்து வைத்து கொள்ளலாம்.

  4. போட்டோக்களை அழகுப்படுத்த...

  இந்த போனில் ஃபன் ஃபீசர்ஸ் மூலம் போட்டோக்களின் நிறம், நாம் அணிந்திருக்கும் உடையின் நிறம், பேக்கிரவுண்ட் உள்ளிட்டவற்றை சரி செய்து கொள்ளலாம். ஒரு புகைப்படத்தில் முயல், நட்சத்திரம் என நிஜத்தில் இருப்பது போல் செய்து கொள்ளும் ஆக்மென்டட் ரியாலிட்டி ஸ்டிக்கர்கள் உள்ளன.

  7 Reasons Why You Should Own the OPPO F7 Right Away

  5.துல்லியமான தொழில்முறை வடிவமைப்பு

  எஃப் 7 போனின் வடிவமைப்பு மிக துல்லியமாக காணப்படுகிறது. இது 3 நிறங்களில் கிடைக்கின்றன. உங்களுக்கு ஏற்றார் போல் சோலார் சிகப்பு, மூன்லைட் சில்வர் என நிறங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

  6. மேம்படுத்தப்பட்ட இயங்கு முறைமை (ஆபரேட்டிங் சிஸ்டம்)

  இந்த போனில் கலர் 5.0 என்ற நவீனமயமான ஆபரேட்டிங் சிஸ்டம் புகுத்தப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் உங்கள் முகத்தை அடையாளம் காணுமாறு செய்து 0.08 வினாடிகளில் போனை அன்லாக் செய்யலாம். மேலும் சேஃப் பாக்ஸ் என்ற செயல்பாடு மூலம் உங்களுடைய செயலிகள், கோப்புகள், தனிப்பட்ட மெசேஸ்களை மற்றவர்கள் காணாத வகையில் வைத்து கொள்ளலாம்.

  7. நல்ல வலிமையான ஹார்டுவேர்

  இந்த போனில் 64 பிட்4 ஜிபி ஆக்டா கோர் புராசசர் உள்ளது. இதில் மற்ற போன்களை காட்டிலும் 256 ஜிபி மெமரி உள்ளது. டூயல் 4ஜி வோல்டே தொழில்நுட்பம் உள்ளதால் இரு சிம்கார்டுகளையுமே 4ஜி சிம் கார்டுகளை போட்டு கொள்ளலாம். ஒரு சிம்மை பேசுவதற்கும், ஒரு சிம்மை நெட் கனெக்ஷனுக்கும் வைத்துக் கொள்ளலாம்.

  7 Reasons Why You Should Own the OPPO F7 Right Away

  இத்தனை தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு கொண்ட இந்த செல்போனை யோசிக்காமல் வாங்குங்கள்.

  பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  English summary
  OPPO has unleashed its latest, power-packed flagship device, OPPO F7, on March 26, 2018, and we're all excited! Apart from its state-of-the-art industrial design, the new smartphone also sports a notch screen and comes equipped with a bunch of Artificial Intelligence (AI)-backed applications.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more