”80 பேர்” சிறுமியை சிதைத்த கொடூரர்கள்! பாலியல் தொழிலில் தள்ளிய சொர்ணாக்கா! 74 பேர் அதிரடி கைது

Subscribe to Oneindia Tamil

அமராவதி : ஆந்திராவில் கொரோனாவால் தாயை இழந்த சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் 10 பேரை விஜயவாடா போலீசார் கைது செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியயில் ஒரு தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியின் 16 வயது மகள் அங்குள்ள ஒரு அரசுப் பள்ளியில் படித்து வந்தார்

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அந்தச் சிறுமியின் தாயாரும் சிறுமிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு குண்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தாய் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனாவால் தாய் மரணம்

கொரோனாவால் தாய் மரணம்

மருத்துவமனையில் சிறுமியின் தாயுடன் நட்பாக இருந்த சொர்ணகுமாரி என்ற பெண்பணியாளர், அந்த சிறுமியை தத்தெடுத்துக் கொள்வதாகக் கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமியின் தந்தை, தனது மகளை சுவர்ணகுமாரியிடம் ஓப்படைத்திருக்கிறார். இதனையடுத்து, அந்த சிறுமியை அழைத்து சென்ற மருத்துவமனை ஊழியர் சொர்ணகுமாரி, அங்குள்ள விஜயவாடா, காக்கிநாடா, நெல்லூர் , ஐதராபாத் போன்ற பல்வேறு இடங்களுக்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி இருக்கிறார்.

கடும் அதிர்ச்சி

கடும் அதிர்ச்சி

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியால் எதுவுமே செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் அந்த சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து காணப்பட்டுள்ளது. அதன் பிறகு, அந்த கும்பலிடம் இருந்து எப்படியோ தப்பித்த அந்த சிறுமி, குண்டூரில் உள்ள தனது தந்தையிடம் தனக்கு நடந்த இந்த பாலியல் பலாத்கார சம்பவங்கள் குறித்து கூறி அழுதிருக்கிறார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை, குண்டூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்து உள்ளார்.

ஊழியர்கள் கைது

ஊழியர்கள் கைது

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியில் தொழிலில் தள்ளிய சொர்ணகுமாரி உட்பட அந்த மருத்துவமனை ஊழியர்கள் 21 பேரை அதிரடியாக முதலில் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியை 6 மாதம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில், அதன் பிறகு "இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்" என்று, நீதிபதி உத்தரவிட்டார்.

போக்சோ சட்டம்

போக்சோ சட்டம்

அதன் தொடர்ச்சியாகவே, சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஆந்திர மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 61 போரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் விபச்சார கும்பல் தொடர்பாக மேலும் 10 பேரை குண்டூர் மேற்கு மண்டல போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் எஸ்பி கே.சுப்ரஜா, குற்றம் சாட்டப்பட்ட 10 பேரும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.

80 பேர் அடையாளம்

80 பேர் அடையாளம்

சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக 80 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதுவரை 74 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், 6 பேரை காணவில்லை என்றும் ஏஎஸ்பி கூறினார். "மொத்தத்தில் 35 பேர் விபச்சார அமைப்பாளர்கள். சிறுமியின் சூழ்நிலையைப் பயன்படுத்தி, பல கும்பல்கள் சிறுமியை விலைக்கு வாங்கி, பல மாவட்டங்களுக்கு அழைத்துச் சென்று, அங்கு விபச்சாரத்தில் தள்ளப்பட்டனர், "என்று ஏஎஸ்பி கூறினார். 53 செல்போன்கள், ஒரு கார், 3 ஆட்டோக்கள், 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+