ஆக்சிஜனுக்கு பதில் மயக்கமருந்து... அரசு மருத்துவமனை ஊழியர்களின் அஜாக்கிரதையால் சிறுவன் பலி
இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் ஊழியர்களின் அஜாக்கிரதையால் ஆக்சிஜனுக்கு பதில் மயக்க மருந்து வாயு கொடுக்கப்பட்டதில் எட்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 18 மாத குழந்தை ஒன்று மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மகாராஜா யெஸ்வந்த்ராவ் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. சமீபத்தில் இங்கு ஆயுஷ் என்ற எட்டு வயது சிறுவன் ஒருவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.
கடந்த வெள்ளியன்று அவனுக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அப்போது ஆபரேஷன் தியேட்டரில் ஆக்சிஜனுக்கு பதிலாக மயக்க மருந்துவை குழாய் மூலம் அதிகளவு கொடுத்துள்ளனர். இதில் அவனது உடல் மிகவும் மோசமடைந்தது. பின், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக அச்சிறுவன் உயிரிழந்தான்.
இதேபோல், தவறுதலாக மயக்க மருந்து அதிகளவில் அளிக்கப்பட்ட 18 மாதக் குழந்தை தொடர்ந்து அதே மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறது.
பொதுவாக ஆபரேஷன் தியேட்டர்களில் குழப்பத்தைத் தவிர்க்க ஆக்ஸிஜன் சிலிண்டருக்கு ஒரு வித கலரில் ட்யூபும், மயக்க மருந்தான நைட்ரஸ் ஆக்சைடு சிலிண்டருக்கு வேறு கலரில் ட்யூபும் பயன்படுத்தப் படுவது வழக்கம்.
ஆனால், அதனையும் சரிவர கவனிக்காமல் ஊழியர்கள் அஜாக்கிரதையாகச் செயல்பட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அந்த ஆபரேசன் தியேட்டருக்கு சீல் வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ராஜேந்திர சதாரி என்ற காண்ட்ராக்டரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் தான் சிலிண்டர்களில் தவறுதலாக ட்யூப்களை மாற்றி வைத்தவர் எனக் கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications