For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

80 சதவீதம் இந்தியப் பெண்களுக்கு பேங்க் அக்கவுண்ட் இல்லையாம் - சொல்கிறது ஐ.நா!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் 80 சதவீதம் பெண்களுக்கு வங்கி கணக்குகள் இல்லை என்று ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

ஐ.நா சபையின் வளர்ச்சி திட்டம் ஆணையம் மனிதவள மேம்பாட்டு குறியீடு தரவரிசை குறித்த அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதில் உலக அளவில் வாழ்க்கை தரம், சராசரி ஆயுட்காலம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தரவரிசை பட்டியல் உள்ளது.

பாலின சமத்துவம்:

பாலின சமத்துவம்:

அந்த அறிக்கையில் குறிப்பாக உலக அளவில் பல்வேறு நாடுகளில் நிலவி வரும் பாலின சமத்துவம் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக இந்திய பெண்கள், இளைஞர்கள், பாகுபாடுகள் குறித்த கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

சுரண்டப்படும் பெண்கள்:

சுரண்டப்படும் பெண்கள்:

அந்த அறிக்கையில், "கூலியில்லா உழைப்பால் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் சுரண்டப்படுகிறார்கள். 39 சதவீதம் பெண்களின் உழைப்பிற்கு வருமானம் கிடைப்பதில்லை.

80 சதவீதம் பெண்கள்:

80 சதவீதம் பெண்கள்:

இந்தியா, பாகிஸ்தான், மெக்ஸிகோ, உகாண்டா உள்ளிட்ட 38 நாடுகளில் 80 சதவீதம் பெண்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை.ஆனால் ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் 90 சதவீதத்திற்கு அதிகமாக பெண்கள் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர்." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலையில்லா இளைஞர்கள்:

வேலையில்லா இளைஞர்கள்:

மேலும், இந்தியாவில் 10 சதவீதம் இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
United Nations Development Programme (UNDP) released the Human Development Report for 2015 and it paints a disturbing picture of gender inequality in Indian society. In the section titled 'Imbalances In Paid And Unpaid Work', it states that 42 percent of the world's women were found to have not had access to bank accounts in 2014.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X