காதலனை சுட்டுக்கொன்று காதலி பலாத்காரம்.. மகாராஷ்டிராவில் கொடூரம்

தானே:மகாராஷ்டிராவில் காதலனை சுட்டுகொன்றுவிட்டு காதலி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.
வடமாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும் கொல்லப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டதில் உள்ள ஒரு கிராமத்தில் காதலியின் கண் முன்னே காதலன் சுட்டுக்கொல்லபட்ட சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலர்களிடம் பிரச்சனை
கணேஷ் டிங்கா் என்ற இளைஞரும் அவரது காதலியும் நேற்று இரவு நலிம்பி கிராமத்தில் உள்ள குளத்தின் அருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவர்கள் இருவரிடம் பணம் கேட்டுள்ளான்.

தவறாக நடக்க முயற்சி
ஆனால், கணேஷ் டிங்கரும் அவரது காதலியும் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதை அடுத்து அவா்களை துப்பாக்கியை காட்டிய மிரட்டிய அந்த மர்ம நபர், அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளான்.

காதலி பலாத்காரம்
இதனால், ஆத்திரம் அடைந்த கணேஷ் டிங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உடனே, தன்னிடம் இருந்த துப்பாக்கி மூலம், கணேஷ் டிங்கரை சுட்டுக்கொன்ற மர்ம நபர், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பிச்சென்றுள்ளான்.

காவல்துறை விசாரணை
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!