For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் ஒரு மாட்டிறைச்சி வன்முறை.. எருமை மாடு கொண்டு சென்றவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல்!

மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக ஃபரிதாபாத்தில் 4 இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குல் நடத்தப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

ஃபரிதாபாத்: மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக ஃபரிதாபாத்தில் 4 இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குல் நடத்தப்பட்டுள்ளது.

ஆசாத், ஷெக்ஸாத், ஷகில் மற்றும் சோனு ஆகிய நான்கு இளைஞர்கள் ஹரியானா மாநிலம் ஃதேபூரிலிருந்து இறைச்சிகளை வாங்கி பழைய ஃபரிதாபாத் மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று எருமை மாடுகளுடன் இளைஞர்கள் பழைய ஃபரிதாபாத்துக்கு சென்றுள்ளனர். அப்போது 20 பேர் கொண்ட கும்பல் அவர்களை கடுமையாக தாக்கியது.

இளைஞர்கள் மீது தாக்குதல்

இளைஞர்கள் பசு இறைச்சியை எடுத்து செல்வதாக கூறி அவர்கள் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இளைஞர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

20 பேர் மீது வழக்கு

தாக்கிய போது கோமாதாவுக்கு ஜெய் என்றும் ஹனுமனுக்கு ஜெய் என்றும் கோஷமிடுமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பசு பாதுகாப்பு என்ற பெயரில்

பசு பாதுகாப்பு என்ற பெயரில்

ஏற்கனவே பசு பாதுகாப்பு என்ற பெயரில் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு பிரதமர் மோடியும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உருட்டுக்கட்டையால் தாக்குதல்

உருட்டுக்கட்டையால் தாக்குதல்

பசுக்களை கொல்வதும் அதன் இறைச்சியை பயன்படுத்துவதும் ஹரியானாவில் சட்டவிரோதமானது. ஆனால் எருமைகள் குறித்து சட்டத்தில் எதுவும் கூறவில்லை. நேற்று நன்க்ளா - பளி சாலையில் உள்ள பஜ்ரி கிராமத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. மேலும் உருட்டுக்கட்டைகளை கொண்டு இளைஞர்களை அந்தக்கூட்டம் தாக்கியுள்ளது.

English summary
A group of men was allegedly assaulted by so-called cow protection groups in Old Faridabad on Friday, the latest in a string of attacks by right-wing Hindu groups on people over suspicions that they may be selling or consuming cow meat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X