உடைந்த காலை, நோயாளிக்கு தலையணையாக கொடுத்த மருத்துவமனை.. உ.பி.யில் கொடூரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  உ.பி.யில் உடைந்த காலை நோயாளிக்கு தலையணையாக வைத்த மருத்துவமனை

  லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தலையணை இல்லாததால் அதே நோயாளியின் உடைந்த காலை தலைகாணியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

  ஜான்சி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. விபத்தில் கான்ஷியாம் என்ற நபரின் கால் விபத்தில் உடைந்து விழுந்து இருக்கிறது.

  தலையணை இல்லாத காரணத்தால் அவரது உடைந்த காலையே தலைகாணியாக அவருக்கு கொடுத்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

  பள்ளி பேருந்து

  பள்ளி பேருந்து

  கான்ஷியாம் உதவியாளராக வேலை பார்க்கும் பள்ளி வாகனம் ஒன்று நேற்று விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதில் 25 குழந்தைகள் மோசமாக காயமடைந்து இருக்கிறார்கள். கான்ஷியாம் கால் அந்த இடத்திலேயே உடைந்து தனியாக வந்து இருக்கிறது.

  கொடுமை

  கொடுமை

  இந்த நிலையில் எல்லோரும் உடனடியாக அங்கு இருக்கும் ஜான்சி மருத்துவ கல்லூரி மற்றும் பல்நோக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார்கள். அப்போதுதான் கான்ஷியாமிற்கு தலைகாணிக்கு பதில் அவரது காலையே தலையணையாக பயன்படுத்த கொடுத்து இருக்கிறார்கள்.

  கண்டுகொள்ளவில்லை

  கண்டுகொள்ளவில்லை

  கான்ஷியாமின் குடும்பத்தினர் வந்து தலையணை கேட்டும் அவர்கள் இல்லை என்று கூறியுள்ளார்கள். மொத்தமாக 4 மணி நேரம் இப்படியே செய்து இருக்கிறார்கள். பின் கான்ஷியாமின் குடும்பத்தினரே வெளியே சென்று தலையணை வாங்கி வந்துள்ளார்கள்.

  பல நோயாளிகள்

  பல நோயாளிகள்

  உத்தர பிரதேசத்தில் இருக்கும் மருத்துவமனைகளில் இதுதான் மிகவும் சிறந்த மருத்துவமனை என்று கூறப்படுகிறது. முக்கியமாக இதற்கு பல்நோக்கு மருத்துவமனை என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A Multi Speciality Hospital in UP named Jhansi Medical College uses a man named Ghanshyam's broken leg a pillow for him.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற