சக பாம்புகள் மேலே ஏறிப் படுத்ததால் மூச்சுத் திணறி இறந்த அரிய வகை மலைப்பாம்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மைசூர் : மைசூரில் உள்ள ஸ்ரீசாம்ராஜேந்திரா விலங்கியல் பூங்காவில் அரிய வகை மலைப்பாம்பு ஒன்று திடீரென உயிரிழந்துள்ளது. அதன் மீது மற்ற பாம்புகள் தூங்கியதால் மூச்சுத்திணறி மலைப்பாம்பு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைசூரின் பெலகவி பகுதியில் ஸ்ரீ சாம்ராஜேந்திரா விலங்கியல் பூங்கா செல்பட்டு வருகிறது. இங்கு அரிய வகை பாம்புகள் மற்றும் விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறத.

A Rock python chocked to death by other pythons at Mysuru Zoo

இந்நிலையில் இங்குள்ள தொட்டியில் அடைக்கப்பட்டிருந்த அரியவகை மலைப்பாம்பு ஒன்று கடந்த திங்கட்கிழமை இயக்கமற்ற நிலையில் இருப்பதைக் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கண்டனர். இதையடுத்து பூங்கா நிர்வாகத்திடம் தெரிவித்த ஊழியர்கள் மலை பாம்பு உயிரிழந்திருப்பதை உறுதி செய்தனர்.

கடும் குளிர் காரணமாக அந்த அரிய வகை மாலை பாம்பு இறந்திருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் அந்த தொட்டியில் அடைக்கப்பட்டிருந்த சில பாம்புகள் இந்த அரிய வகை மலைப்பாம்பின் மீது படுத்து தூங்கியுள்ளன. இதில் அந்த அரிய வகை மலைப்பாம்பு மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

பாம்பு இறந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில வனத்துறை அமைச்சர் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 20 நாட்களில் மட்டும் இந்த விலங்கியல் பூங்காவில் ஒரு வரிக்குதிரை, ஒரு ராஜநாகம், சிங்க வால் குரங்கு, காட்டெருமை, கழுதைப்புலி உள்ளிட்ட 20 விலங்குகள் உயிரழந்துள்ளதாக கூறப்படுகிறது. கடும் குளிர் தரக்குறைவான உணவு மற்றும் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததே விலக்குகளின் உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In a incident at Mysur Zoo a rock python chocked to death on monday. The reason is other pythons inside a pen were sleeping on the rock python.
Please Wait while comments are loading...