For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் கேட்ட கேள்வி.. ஸ்டன் ஆன ராகுல் காந்தி

Google Oneindia Tamil News

Acid attack victim stumps Rahul
பெங்களூர்: ஆசிட் வீச்சில் ஒரு கண் பார்வையை இழந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் கேட்ட கேள்வியாலும், அவர் வைத்த அடுக்கடுக்கான கோரிக்கைகளாலும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பதிலளிக்க முடியாமல் மெளனமாகி விட்டார்.

பெங்களூர் வந்திருந்தார் ராகுல் காந்தி. அங்கு 200க்கும் மேற்பட்ட இளைஞர்களை அவர் சந்தித்து உரையாடினார். அவர்களில் ஒருவர் சோனாலி சர்மா. இவர் சமீபத்தில் டிவி கேம் ஷோவில் வெற்றி பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். திரும்பிப் பார்க்கக் காரணம், இவர் ஆசிட் வீச்சில் ஒரு கண் பார்வையைப் பறி கொடுத்தவர் என்பதால்.

ராகுல் காந்தி சந்திப்பின்போது சோனாலி பல்வேறு கேள்விகளை அவர் முன் வைத்து அவரால் பதிலளிக்க முடியாத நிலையை ஏற்படுத்தினார். சோனாலி ராகுலிடம் பேசுகையில், என்னைப் போன்ற பாதிக்கப்பட்டோருக்கும் அரசியலில் வாய்ப்பளிக்க அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும். ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட எங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்.

இப்படிச் செய்யாமல், எப்படி எங்களைப் போன்றோருக்கு உதவ அரசால் முடியும்.. எங்களது சிகிச்சைச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும். எங்ளுக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்க அரசுதான் வகை செய்ய வேண்டும்.

நான் தினசரி செத்துச் செத்துப் பிழைக்கிறேன். கிட்டத்தட்ட 10 வருடங்களாக நான் நீதி கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறேன் என்றார் சோனாலி.

அவர் பேசுவதை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த ராகுல் காந்தி, பின்னர் ஏன் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வேண்டும். நீங்கள் நேரடியாக லோக்சபா தேர்தலிலேயே போட்டியிடலாமே என்று கேட்டார். பின்னர் கூட்டம் முடிந்ததும் தன்னை வந்து சந்திக்குமாறும் சோனாலியிடம் கூறினார் ராகுல் காந்தி.

ஆனால் கூட்டம் முடிந்ததும் ராகுல் காந்தி அங்கிருந்து வேகமாக சென்று விட்டார். இதனால் சோனா்லியால் அவரைச் சந்திக்க முடியாமல் போனது.

இந்த சந்திப்பின்போது ஆம் ஆத்மியின் வெற்றி குறித்தும் ராகுல் காந்தி பேசினார். ஆனால் ஆம் ஆத்மியின் வெற்றிக்குக் காங்கிரஸ்தான் காரணம் என்றும் அவர் விளக்கினார்.

அதுகுறித்து ராகுல் கூறுகையில், காங்கிரஸ் கட்சி இல்லாவிட்டால், காங்கிரஸ் ஆட்சியில் தகவல் அறியும் உரிமை பெறும் சட்டத்தை அமல்படுத்தியிருக்காவிட்டால் இன்று ஆம் ஆத்மி கட்சியே இருந்திருக்காது. மக்களுக்கு கேள்வி கேட்கும் உரிமையைக் கொடுத்தது காங்கிரஸ்தான். அதைத்தான் இன்று மக்கள் பயன்படுத்தி அரசைக் கேள்வி கேட்கிறார்கள். எனவே காங்கிரஸுக்குத்தான் அந்தப் பெருமை போய்ச் சேர வேண்டும் என்றார் அவர்.

குறுகிய காலமே வாழக் கூடிய கட்சி ஆம் ஆத்மி என்றும் ராகுல் காந்தி தனது பேச்சின்போது குறிப்பிட்டார்.

English summary
The 28-year-old woman from Jharkhand called for political inclusion and for government to be sensitive to survivors like her want to be given a chance to enter politics." Rendered partially blind after the acid attack, the victim from Jharkhand lobbed her demand to the Congress party's PM probable and All India Congress Committee vice-president Rahul Gandhi, he was left stumped. About 200 youngsters were having an interactive session with Gandhi in Bangalore on Saturday when Sonali Sharma, who made national and international news following her win on a TV game show, called for political inclusion. "I insist on leaders giving victims like me a chance to enter politics. We should be considered to contest Rajya Sabha elections. How else can the government show it is sensitive to victims like me? The government must take responsibility for our treatment and also help us find our feet in society," said the girl. "I die a death every day. It's been 10 years since I've been fighting for justice."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X