மோடி அரசு தனது நிர்வாக திறமையின்மையை ஒப்புக்கொள்ள வேண்டும்: ராகுல் காந்தி கடும் தாக்கு
டெல்லி: பிரதமர் மோடி தனது நிர்வாக திறமின்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிவிட்டரில் அவர் கூறுகையில், ஜிஎஸ்டி எனும் கப்பார் சிங் (கொள்ளையன்) வரியை காங்கிரஸ் அனுமதிக்காது. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முடங்குவதையும் காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது. வரி மூலம் லட்சக்கணக்கானவர்களின் வேலை வாய்ப்பையும் காங்கிரஸ் அனுமதிக்காது என்று ஒரு டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

மற்றொரு டிவிட்டில், நமது நாட்டுக்கு எளிய வரிவதிப்பு முறை தேவை. அதனை செயல்படுத்தாமல், வெறும் பேச்சிலேயே இந்திய மக்களின் நேரத்தை வீணடிக்காதீர்கள்.
We will not allow BJP to impose a Gabbar Singh Tax on India. They cannot break the back of the small and medium businesses, crush the informal sector and destroy millions of jobs. #GSTCouncilMeet
— Office of RG (@OfficeOfRG) November 10, 2017
மோடி அரசு தனது நிர்வாகத்திறமின்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். பிடிவாதத்தை கைவிட்டு, மக்களின் குரல்களுக்கு செவி சாய்க்க வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Some Suggestions
— Office of RG (@OfficeOfRG) November 10, 2017
1. Correct the fundamental flaw in GST architecture to give India a Genuine Simple Tax.
2. Don’t waste India’s time with lip service.
3. Acknowledge your incompetence, shed your arrogance and listen to the people of India.












Click it and Unblock the Notifications