நடிகை 'குத்து' ரம்யாவுக்காக பிரச்சாரம் செய்ய வருவாரா நடிகர் அம்பரீஷ்?

Subscribe to Oneindia Tamil

மாண்டியா: நாடாளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிடும் நடிகை ரம்யாவுக்காக கன்னட நடிகர் அம்பரீஷ் வாக்கு சேகரிப்பார் என்று கூறப்படுகிறது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகை 'குத்து' ரம்யா கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் பிரச்சாரத்தை துவங்கிவிட்டார்.

Actor Ambareesh to campaign for Ramya?

மாண்டியா முழுவதும் பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்காக கன்னட நடிகரும், அமைச்சருமான அம்பரீஷ் பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது. அம்பரீஷ் அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா ரம்யாவுக்காக மாண்டியா மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார். ரம்யா கன்னட திரை உலகில் பெரிய நடிகை என்ற போதிலும் அவருக்காக பிரச்சாரம் செய்ய சாண்டல்வுட்டில் இருந்து யாருமே வரவில்லை.

இந்நிலையில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் ரம்யாவுக்கு தொண்டை வலியாம். அதனால் அவர் ஒரு நாள் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளாராம்.

முன்னதாக மாண்டியா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரம்யா வெற்றி பெற்று இந்தியாவின் இளம் எம்.பி. ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+