For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனாதிபதி வேட்பாளராக நடிகர் ரஜினிகாந்த் பெயர் பரிந்துரை?

ஜனாதிபதி பதவிக்கு நடிகர் ரஜினிகாந்தின் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் அந்த பதவிக்கு நடிகர் ரஜினிகாந்தின் பெயரை பரிந்துரைக்க பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் அப்பதவிக்கான வேட்பாளர் குறித்து பாஜக தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர், அனைத்து கட்சியினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். யாரும் ஆட்சேபம் தெரிவிக்காமலும் இருக்க வேண்டும் என்பது பாஜகவின் திட்டம்.

ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தல்

தற்போது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ளது. அப்பதவிக்கான வேட்பாளர் பட்டியலை தயார் செய்யும் பணிகளை பாஜக தொடங்கியது.

அத்வானி, ஜோஷி

அத்வானி, ஜோஷி

பாஜக மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிக்கியுள்ளதால் இருவருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

அமிதாப்பச்சன்

அமிதாப்பச்சன்

மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் பெயர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு அடிபட்டது. அதேநேரத்தில் பனாமா நாட்டில் முதலீடு செய்துள்ளோரின் பெயர் பட்டியலில் அமிதாப்பின் பெயர் இருந்ததால் அவருக்கும் வாய்ப்பு பறிபோய்விட்டது.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

இச்சூழலில்தான் அப்துல்கலாமை தேர்வு செய்து திக்குமுக்காட வைத்த அதே பார்முலாவை கடைபிடிக்க பாஜக முன்வந்துள்ளது. இதனடிப்படையில் நடிகர் ரஜினிகாந்தின் பெயரை வேட்பாளராக அறிவிக்க பாஜக மேலிடம் ஆலோசித்து வருகிறது.

எதிர்ப்பு இருக்காது

எதிர்ப்பு இருக்காது


நடிகர் ரஜினிகாந்தின் பெயரை பரிந்துரைக்கும் நிலையில் எந்த கட்சியுமே எதிர்க்க வாய்ப்பு இல்லை என்பது பாஜகவின் கணக்கு. மேலும் வடமாநிலங்களில் பாஜக அரசியலில் காலூன்றினாலும் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, திமுக ஆகிய திராவிடக் கட்சிகளால் பாஜகவுக்கு பூஜ்ஜியம்தான்.

அதுவும் விவசாயிகள் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, நெடுவாசல் உள்ளிட்ட பிரச்சினைகளில் மத்திய பாஜக அரசின் மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் பாஜக திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை ஜனாதிபதி வேட்பாளராக்கினால் தமிழகத்தின் கோபம் குறையும்; காலூன்ற ஒரு நல்ல வாய்ப்பும் கிடைக்கும் என்பதுதான் பாஜகவின் திட்டம் என்கின்றன டெல்லி தகவல்கள்.

English summary
Is Rajinikanth the next President of India? Several circles in both Delhi and Tamil Nadu is abuzz with the news that the the super-star also known as Rajini will be Narendra Modi's choice for the post of president.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X