விஷாலை யாருன்னு கேக்குறாரே இந்த பிரபல தெலுங்கு நடிகர்... என்னத்த சொல்ல!
நடிகர் விஷால் யார் என்று பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா கேள்வி கேட்டு கலங்கடித்துள்ளார்.
Recommended Video

திருப்பதி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் யார் என்று கேட்ட நடிகர் ராம்சரண், பின்னர் சுதாரித்துக் கொண்டு பதில் அளித்தார்.
நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரணும், அவரது மனைவி உபாசனாவும் (இவர் அப்பல்லோ பிரதாப் சி ரெட்டியின் பேத்தி) திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை திருப்பதி கோயிலுக்கு வந்த அவர்களுக்கு, தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

சுவாமி தரிசனத்துக்கு பின்னர் காரில் ஏறி புறப்பட்ட ராம்சரணிடம், நடிகர் விஷால் அரசியலுக்கு வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது, விஷால் யார் என்று கேள்வி எழுப்பிய ராம்சரண், பின்னர் சுதாரித்துக் கொண்டு, அண்டை மாநில அரசியல் குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டிக்கு பூர்வீகம் ஆந்திர மாநிலம்தான். அவர் தெலுங்கு படத்தயாரிப்பாளராக இருந்தார். பின்னர் குடும்பத்துடன் சென்னையில் செட்டில் ஆகிவிட்டார்.
அவருக்கு விக்ரம் கிருஷ்ணா, விஷால் கிருஷ்ணா ஆகிய இரு மகன்கள் உள்ளனர். அதில் 2-ஆவது மகன் நடிகர் விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அதற்காக இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications