Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி ஸ்டேடியம்ல ஐபோனை காணோம்.. 24 கார்ட் தங்கம்! இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு சென்ற நடிகை புலம்பல்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண சென்ற நடிகை ஊர்வசி ரவுடேலா தன்னுடைய 24 காரட் தங்க ஐபோனை காணவில்லை என தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கி நடந்து வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியையும் டெல்லியில் நடந்த 2 வது போட்டியில் ஆப்கானிஸ்தானையும் இந்திய அணி வீழ்த்தி வெற்றிபெற்றது. இதனை அடுத்து பலரால் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

 Actress Urvashi Rautela missing her 24 carat gold iPhone in India-Pakistan match at modi stadium

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் நிதானமாக ஆடினால், 20 ஓவர்களுக்கு பின் இந்திய அணி பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களுக்கே ஆட்டமிழந்தனர். அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி, கேப்டன் ரோகித் ஷர்மாவின் அபாரமான ஆட்டத்தால் எளிதில் இலக்கை கடந்து வெற்றிபெற்றது.

இந்த போட்டியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவரது மகனும் பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா, இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் சினிமா பிரபலங்கள் என பலர் வந்திருந்தனர். அதேபோல் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலாவுடன் வந்திருந்தார். இந்த போட்டியை காண செல்வதற்கு முன் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான 5 டிக்கெட்டுகளை வைத்திருக்கும் வீடியோவையும் அவர் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் இன்று அவர் ட்விட்டரில் வெளியிட்டு உள்ள பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தன்னுடைய 24 காரட் உன்மையான தங்க ஐபோனை காணவில்லை என அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், "என்னுடைய 24 காரட் உண்மையான தங்க ஐபோனை நரேந்திர மோடி ஸ்டேடியமில் தவறவிட்டுவிட்டேன். அதனை யாராவது பார்த்தால் உதவி செய்யுங்கள். உடனடியாக தொடர்புகொள்ளுங்கள். யாராவது உதவி செய்பவர்கள் இருந்தால் டேக் செய்திடுங்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார். மற்றொரு பதிவில் குஜராத் அஹமதாபாத் காவல் நிலையத்தில் அளித்த புகார் படிவத்தையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+