அதிமுக பொதுச் செயலாளர் பதவி ரத்து: தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்.. டெல்லி ஹைகோர்ட் அதிரடி
அதிமுக பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் 4 வாரத்தில் முடிவெடுக்க தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommended Video

டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் 4 வாரத்தில் முடிவெடுக்க தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்த பின் அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என்று இரண்டு பிரிவுகள் உருவானது. இதனால் கட்சி உடையும் நிலை ஏற்பட்டது. ஆனால். சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறை சென்ற பின், எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ பன்னீர் செல்வம் அணி, டிடிவி தினகரன் அணி என்று மூன்று அணிகள் உருவானது.

இந்த நிலையில் இணைந்த எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ பன்னீர் செல்வம் அணி இரண்டும் சேர்ந்து பொதுக்குழு கூட்டியது. அதன்படி சசிகலாவை கட்சியைவிட்டு தூக்கும் வகையில், அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டது.
அதற்கு பதிலாக முடிவெடுக்கும் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுகவின் பொதுக்குழு முடிவிற்கு எதிராக திமுகவை சேர்ந்த கே.சி. பழனிச்சாமி வழக்கு தொடுத்தார். அதிமுக கட்சி மாற்றம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் 4 வாரத்தில் முடிவெடுக்க தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணைய அதிமுக நிர்வாகிகளிடம் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் என்றுள்ளது.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications