
அம்மாவுக்காக கேரளாவில் 'யானை பூஜை' செய்த 2 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்
குமுளி: முதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி தேக்கடியில் அதிமுகவினர் யானை பூஜை செய்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்றுடன் அவர் 69 நாளாக மருத்துவமனையில் உள்ளார்.

அவர் நலம் பெற வேண்டி அதிமுகவினர் அப்பல்லோ வாசலிலும், கோவில்களிலும் சிறப்பு பூஜை செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களான டி.எஸ். செல்வம் மற்றும் எஸ்.டி.கே. தேக்கடியில் யானை பூஜை செய்துள்ளனர்.
இந்த பூஜைக்காக குமுளியில் இருந்து மூன்று யானைகள் வரவழைக்கப்பட்டன. ஒரு மணிநேரம் பூஜை நடந்தது. பின்னர் யானைகளுக்கு பிடித்தமான உணவு வகைகள் அளிக்கப்பட்டன.
இந்த யானை பூஜையில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர். அம்மா நலம் பெற வேண்டி இந்த பூஜையை நடத்தியதாக செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
யானை பூஜையை முடித்த கையோடு அவர்கள் அருகில் உள்ள மசூதிக்கும் சென்று பிரார்த்தனை செய்தனர்.