காவிரி விவகாரத்தில் அதிமுக எம்பிக்கள் 7-ஆவது நாளாக போராட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: காவரி விவகாரத்தில் அதிமுக எம்பிக்கள் 7-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழகம் மேலமுறையீடு மனு தாக்கல் செய்திருந்தது. இது தொடர்பாக கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை காட்டிலும் தமிழகத்துக்கு குறைவான நீரையே தீர்ப்பாக அளித்துள்ளது உச்சநீதிமன்றம். இதில் ஆறுதல் தரும் விஷயம் என்னவென்றால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்டதுதான்.

admkmp

இந்த மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. மத்திய அரசு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பதே இல்லை என்று கைவிரித்தனர்.

இதை கண்டித்து கடந்த வாரம் அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு போராட்டத்தை தொடங்கினர். இன்று 7-ஆவது நாளாக அவர்களது போராட்டம் நடைபெற்றது.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கக் கூடாது என அதிமுக எம்பிக்கள் முழக்கமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK MPs continue their protest for 7th day in the issue of Cauvery water dispute.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற