For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜோடியா சுத்துறாங்களாம்.. பூங்கா-ஜிம் செல்ல பெண்களுக்கு தடை போட்ட தாலிபான்கள்.. ஆப்கானில் அதிரடி

Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் ஆட்சி செய்து வரும் நிலையில் ஜிம் மற்றும் பூங்காவுக்கு செல்ல பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி ஜோடி ஜோடியாக சுற்றியதால் இந்த புதிய உத்தரவை தாலிபான்கள் பிறப்பித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான்.. உள்நாட்டு போருக்கு பெயர் பெற்ற நாடாக இருந்தது. இதனால் மக்கள் பெரும் துன்பத்தை சந்தித்தனர். இதையடுத்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானுக்கு சென்று முகாமிட்டு உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்தது.

இதையடுத்து ஆப்கானிஸ்தானில் முந்தைய காலத்தை ஒப்பிடும்போது அமைதி திரும்பியது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டில் இருந்து அமெரிக்க படைகளை நாடு திரும்ப அந்நாட்டின் அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டார். இதையடுத்து அமெரிக்க படைகள் நாடு திரும்பின.

 திடீரென பெண்கள் போராட்டம்.. துப்பாக்கியால் அடித்து விரட்டிய தாலிபான்கள்.. ஆப்கானிஸ்தானில் பரபரப்பு! திடீரென பெண்கள் போராட்டம்.. துப்பாக்கியால் அடித்து விரட்டிய தாலிபான்கள்.. ஆப்கானிஸ்தானில் பரபரப்பு!

தாலிபான்கள் ஆட்சி

தாலிபான்கள் ஆட்சி

அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக வெளியேறியது. இதையடுத்து தாலிபான்கள் உள்நாட்டு போரை துவக்கினர். அங்கு நடந்த மக்களாட்சியை கலைத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற தாலிபான்கள் திட்டமிட்டு செயல்பட்டனர். இதற்கு பலனும் கிடைத்தது. 2021 ஆகஸ்டில் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக தாலிபான்கள் கைப்பற்றினர்.

பெண்களுக்கு எதிராக கட்டுப்பாடுகள்

பெண்களுக்கு எதிராக கட்டுப்பாடுகள்

இதற்கு முன்பு 1996 முதல் 2001 வரை ஆப்கனை தாலிபான்கள் ஆட்சி செய்த நிலையில் தற்போது 2வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளனர். மதத்தின் அடிப்படையில் தாலிபான்கள் பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதை வாடிக்கையாக கொண்டனர். இதனை தற்போதும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர். தொடர்ந்து பெண்களுக்கு எதிராக புதுபுது கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வருகின்றனர்.

கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு

கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு

விமான பயணங்களில் பெண்கள் தனியாக பயணிக்க கூடாது. வேலைக்கு செல்லக்கூடாது என உத்தரவு போட்டனர். மேலும் பள்ளி செல்ல மாணவிகளுக்கு தடை விதித்தனர். அதோடு டிரைவிங் லைசென்ஸ் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் தலை முதல் கால் வரை முழுவதுமாக மறையும் வகையிலான புர்கா அணிய உத்தரவிட்டுள்ளனர். இந்த கட்டுப்பாடுகளுக்கு உலக நாடுகள், பெண்ணியவாதிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்னளர். இருப்பினும் தாலிபான்கள் செவி சாய்க்கவில்லை.

பெண்கள் பூங்கா-ஜிம் செல்ல தடை

பெண்கள் பூங்கா-ஜிம் செல்ல தடை

இந்நிலையில் தான் தற்போது புதிய உத்தரவு ஒன்றை தாலிபான்கள் அறிவித்துள்ளனர். அதன்படி பெண்கள் உடற்பயிற்சி கூடமான ஜிம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் நன்நெறி பாராமரிப்பு துறை செய்தி தொடர்பாளர் முகம்மது அமெப் மொகாஜீர் கூறுகையில், ‛‛ பெண்களும், ஆண்களும் வெவ்வேறு நாட்களில் பூங்கா செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் பல பூங்காக்களில் பலர் ஒன்றாக உள்ளனர். இதனால் பூங்கா மற்றும் ஜிம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது உத்தரவு இந்த வாரம் முதல் அமலுக்கு வர உள்ளது'' என கூறப்பட்டுள்ளது.

முந்தைய நடைமுறை என்ன?

முந்தைய நடைமுறை என்ன?

முன்னதாக பூங்காக்களில் ஆண்களும், பெண்களும் தனித்தனியாக செல்ல வேண்டும் என்ற நடைமுறை ஆப்கானிஸ்தானில் இருந்தது. அதன்படி வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மட்டும் பெண்கள் பூங்காக்களுக்கு செல்ல முடியும். மற்ற 4 நாட்கள் ஆண்கள் செல்ல வேண்டும் என தாலிபான்கள் கூறியிருந்தனர். ஆனால் இதனை பொதுமக்கள் பின்பற்றவில்லை எனக்கூறி தற்போது பூங்காக்களுக்கு செல்ல முழுவதுமாக பெண்களுக்கு தாலிபான்கள் தடை விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
With the Taliban ruling Afghanistan, women are banned from going to gyms and parks. The new order was issued by the Taliban after the pair went around in pairs defying the already imposed restrictions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X