0% காதல்.. 100% போலி சிரிப்பு! ஜம்முவில் “திக் திக்”.. டிஜிபி கொலை - சிக்கிய பணியாளரின் “டைரி”
ஸ்ரீநகர்: ஜம்மு டிஜிபி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது வீட்டில் பணிபுரிந்து வந்த யாசிரின் டைரியை போலீசார் குறிப்பிட்டுள்ளனர். அதில், என் வாழ்க்கையை நான் வெறுக்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்று இருக்கிறார். மத்திய அரசு பஹாரி இனத்தவர்களை பழங்குடியினர்களாக முன்மொழிந்ததற்கு ஜம்முவில் அதிகளவில் வசிக்கும் குஜ்ஜார் இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே அமித்ஷா அங்கு சென்றுள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ஜம்முவின் புறநகரில் உள்ள உதய்வாலா பகுதியில் சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியா தன்னுடைய வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தகவலறிந்து சென்ற காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பணியாளர்
அப்போது ஹேமந்த் குமார் வீட்டில் பணிபுரிந்து வந்த நபர் தலைமறைவாகி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அவரை தேடும் பணி முடுக்குவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஹேமந்த் குமாரின் வீடு புதுப்பிக்கப்பட்டு வருவதால், தன்னுடைய நண்பர் ராஜீவ் கஜூரியாவின் வீட்டில் குடும்பத்தோடு அவர் வசித்து வந்தார்.

போலீஸ் விளக்கம்
இதுகுறித்து ஜம்மு கூடுதல் டிஜிபி முகேஷ் சிங் தெரிவிக்கையில், "குற்றம் நடந்த இடத்தை பரிசோதித்தபோது சந்தேகத்திற்குரிய மரணம் என்பது தெரியவந்தது. டிஜிபியின் உடலில் தீக்காயங்களும் உள்ளன. டிஜிபி வீட்டில் பணிபுரிந்து வந்த யாசிர், ராம்பன் மாவட்டத்தை சேர்ந்தவர். அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது." என்றார்.

முன்னெச்சரிக்கை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள நேரத்தில் அம்மாநில சிறைத்துறை டிஜிபியே மர்மமான முறையில் கொல்லப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து அசம்பாவீதங்கள் நிகழாமல் தடுக்க ஜம்மு மற்றும் ரஜோரி பகுதிகளில் இணையதள இணைப்பு துண்டிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

சிக்கிய டைரி
இதற்கிடையே கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் 23 வயது பணியாளர் யாசிரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள காவல்துறை அங்கிருந்த அவரது டைரியை கைப்பற்றி இருக்கிறது. அதில், மறந்துவிடுங்கள் என தலைப்பிடப்பட்ட பக்கத்தில் "என் வாழ்க்கை 1%, காதல் 0%, டென்சன் 90%, சோகம் 99%, போலி சிரிப்பு 100%. என் வாழ்க்கையை நான் வெறுக்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார். இதன் மூலம் யாசிர் மன உளைச்சலில் இருந்து வந்தது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications