For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கைக்கு 2 போர்க் கப்பல்கள் ஏற்றுமதி: மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங்

By Mathi
Google Oneindia Tamil News

கொல்கத்தா: இலங்கைக்கு 2 போர்க் கப்பல்களை இந்தியா ஏற்றுமதி செய்ய உள்ளதாக பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் மொரிசீயசுக்கு வெள்ளிக்கிழமையன்று ஏற்றுமதி செய்யப்பட்டது. இது தொடர்பான விழா கொல்கத்தாவில் நடைபெற்றது.

After Mauritius, India to export warships to Sri Lanka

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் இந்தர்ஜித் சிங், 2 ஆழ்கடல் ரோந்து கப்பல்களுக்கான ஒப்பந்தங்களை இலங்கை கொடுத்துள்ளது. இந்த கப்பல்கள் கோவா கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இந்த கப்பல்கள் முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தால் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன என்று கூறினார்.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தி வரும் நிலையில் மத்திய அமைச்சரின் இந்த தகவல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

English summary
India will now export two warships to Sri Lanka after delivering a warship to Mauritius for the first time, minister of state for defence production Rao Inderjit Singh said here on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X