வெற்றிகரமாக ஏவப்பட்டது ஜிஎஸ்எல்வி டி 5 ராக்கெட்.. தமிழகத்தில் தயாரான கிரையோஜெனிக் என்ஜினால் வெற்றி!
வெற்றிகரமாக ஏவப்பட்டது ஜிஎஸ்எல்வி டி 5 ராக்கெட்.. தமிழகத்தில் தயாரான கிரையோஜெனிக் என்ஜினும் வெற்றி!
ஸ்ரீஹரிகோட்டா: 2010ம் ஆண்டு இரண்டு முறை தோல்வியடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதுமான ஜிஎஸ்எல்வி டி5 ராக்கெட் இன்று மாலை 4.18 மணிக்கு ஏவப்பட்டது.

ராக்கெட் ஏவுதல் முழுமையான வெற்றி பெற்றதாக இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

ஜி.எஸ்.எல்.வி டி5 ராக்கெட்டின் அனைத்து நிலைகளும் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்துப் பிரிந்தன. குறிப்பாக முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் சிறப்பாக செயல்பட்டு கடைசியில், ராக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த ஜிசாட் 14 என்ற தகவல் தொடர்பு செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் தயாரான கிரையோஜெனிக் என்ஜின்
இன்று வெற்றிகரமாக செயல்பட்ட கிரையோஜெனிக் என்ஜின், இந்தியாவின், நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள திரவ எரிபொருள் ஆய்வு மையத்தில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ராக்கெட் ஏவப்பட்ட சில நிமிடங்களில் ராக்கெட்டின் முதல் அடுக்கு வெற்றிகரமாக முதலில் பிரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2வது அடுக்கு பிரிந்தது. கடைசியாக கிரையோஜெனிக் என்ஜின் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியது.

முன்னதாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ஜிஎஸ்எல்வி. டி5 50 மீட்டர் உயரமும், 415 டன் எடை கொண்டதும் இது. அதாவது 80 பெரிய சைஸ் யானைகளின் எடைக்குச் சமமானதாகும். இதை நிறுத்தி வைத்தால் அது 17 மாடிக் கட்டடத்தின் உயரத்திற்கு வரும். மூன்று அடுக்குகளைக் கொண்ட ராக்கெட், ரூ. 350 கோடி பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
2வது முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினை ஜிஎஸ்எல்விக்காக பயன்படுத்தியுள்ளது இந்தியா என்பது முக்கியமானது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதியே இது ஏவப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஏவுவதற்கு 74 நிமிடங்களுக்கு முன்பு எரிபொருள் கசிவு கண்டுபிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டு விட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications