For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘அகிலேஷ் அலி ஜின்னா’...அகிலேஷ் யாதவுக்கு பாஜக வைத்த புதிய பெயர்... உ.பி. துணைமுதல்வர் காட்டம்

Google Oneindia Tamil News

அகிலேஷ் யாதவ் சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுகிறார். அவரது அரசியல் உ.பியில் எடுபடாது, தாமரை மக்களிடம் ஊடுருவியுள்ளது, சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது பெயரை அகிலேஷ் அலி ஜின்னா என்றும் கட்சிப்பெயரையும் மாற்றிக்கொள்ளட்டும் என்று உத்தரப்பிரதேச துணை முதல்வர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,919 பேருக்கு கொரோனா பாதிப்பு- 470 பேர் மரணம் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,919 பேருக்கு கொரோனா பாதிப்பு- 470 பேர் மரணம்

2022 சட்டமன்ற தேர்தல்

2022 சட்டமன்ற தேர்தல்

உ.பியில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு உ.பியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதால் எதிர்க்கட்சிகள் கச்சைக்கட்டி களத்தில் இறங்கி வேலை செய்கின்றன. உ.பியில் ஆளும் பாஜகவை தவிர சமஜ்வாடிக்கட்சி, பகுஜன் சமாஜ் பார்ட்டி, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் உள்ளன.

போராடும் எதிர்க்கட்சிகள்

போராடும் எதிர்க்கட்சிகள்

உத்தரபிரதேசத்தில் எப்படியும் பழைய செல்வாக்கை கொண்டு வந்துவிட வேண்டும் என காங்கிரஸ் பிரியங்கா வடேதரா தலைமையில் வேகமாக வேலை செய்கிறது. மறுபுறம் அகிலேஷ் யாதவ் பெரிய அளவில் அரசுக்கு எதிராக பேசி வருகிறார். ஆதித்யநாத் ஆட்சியில் சிறுபான்மையினர் தாக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது என என சமஜ்வாடிக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பிரச்சார கூட்டங்களில் பேசி வருகிறார்.

பாஜக கோபம்

பாஜக கோபம்

இது பாஜகவினரிடையே கோபத்தை கிளப்பியுள்ளது. இதுகுறித்து உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அகிலேஷ் யாதவை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது.

அகிலேஷ் அலி ஜின்னா

அகிலேஷ் அலி ஜின்னா

"சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் அரசியல் செய்வதற்காக ஜின்னாவை பற்றி பேசுகிறது சமாஜ்வாதிக் கட்சி. அதனால்தான் சொல்கிறேன் அகிலேஷ் யாதவ் தனது பெயரை அகிலேஷ் அலி ஜின்னா என்று மாற்றிக்கொள்ளட்டும். அவரின் கட்சியின் பெயரையும் ஜின்னாவாடிக் கட்சி எனவும் மாற்றிக்கொள்ளட்டும்.

அகிலேஷ் அலி ஜின்னா ஒருபோதும் தேர்தலில் வெல்லமாட்டார். இந்த மாநிலத்தின் மக்கள் பாஜகவைத் தேர்ந்தெடுப்பார்கள். முகமது அலிஜின்னாவோ அல்லது முக்தர் அன்சாரியோ தேர்தலில் வெல்ல உதவமாட்டார்கள்.

உ.பியில் நாங்கள் தான் எப்போதும்- பாஜக

உ.பியில் நாங்கள் தான் எப்போதும்- பாஜக

உ.பியில் மக்கள் தாமரைச் சின்னத்தைத்தான் மீண்டும் தேர்வு செய்வார்கள். இந்த மாநிலத்தின் மக்களை நேர்மையுடன் அணுகும்கட்சி பாஜக மட்டும்தான். ஒரு காலத்தில் மாஃபியாக்கள், கூலிப்படைகள் ஏராளமாக இருந்த நிலையில் அவற்றை ஒழித்து முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்தியது பாஜக அரசுதான்.

தொடர் தோல்வி அஞ்சும் எதிர்க்கட்சிகள்

தொடர் தோல்வி அஞ்சும் எதிர்க்கட்சிகள்

கடந்த 3 தேர்தலில் தொடர் தோல்வியை சந்தித்ததால் எதிர்க்கட்சிகள் அச்சத்தில் உள்ளன, இந்தமுறையும் தோற்றுவிடுவோம் என அச்சப்படுகிறார்கள். ஆனால், எங்களுக்கு களநிலவரம் என்ன என்று தெரியும், கிளைமட்டத்திலிருந்து பாஜக வலுவாக இருக்கிறது. இது சமாஜ்வாதிக்கட்சிக்கும் தெரியும். அவர்களிடம்தான் கூலிப்படைகளும், குண்டர்களும், மாஃபியாக்களும் இருக்கிறார்கள்"

English summary
‘Akhilesh Ali Jinnah’, BJP's new name for Akhilesh Yadav
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X