ஆல் பாஸ் சிஸ்டம் ரத்து.. 5, 8-ம் வகுப்பு மாணவர்களே உஷார்.. அசாம் அரசு திடீர் முடிவு.. ஏன் தெரியுமா?
கவுகாத்தி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் இனி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தானாக பாஸ் ஆகும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு நடைபெறும் என்றும் தேர்ச்சி அடையாத மாணவ - மாணவிகள் அதை வகுப்பை மீண்டும் படிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்ற்கான முடிவு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அசாம் கல்வித்துறை அமைச்சர் ரானோஜ் பெகு கூறியதாவது:-

கட்டாய கல்வி உரிமைச்சட்டம்
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் கீழ் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் படிக்கும் ஒரு மாணவ- மாணவியருக்கு தேர்வுகள் வைக்கலாம். ஆனால் தேர்வில் தேர்ச்சி அடையாவிட்டாலும் தேக்க நிலையில் வைக்கக் கூடாது. அதாவது பெயில் ஆக்க கூடாது என்ற விதிகள் உள்ளன. எனினும் கடந்த 2019 ஆம் ஆண்டு அசாம் அரசு இந்த சட்டத்தை திருத்தம் செய்தது.

தேர்ச்சி பெற்றால் தான்..
இந்த திருத்தத்தின் அடிப்படையில் தற்போது அமைச்சரவை புதிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, 5 மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு தேர்வு நடத்தப்படும். தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவ மாணவிகள் அடுத்த வகுப்புக்கு செல்ல முடியாது. அதேவகுப்பை மீண்டும் படிக்க வேண்டும். எனினும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பு ஒன்று வழங்கப்படும். இரண்டு மாதங்களுக்குள் இந்த மறு தேர்வு நடைபெறும்.

அதே வகுப்பில் தான் படிக்கனும்
இதில் தேர்ச்சி பெற்றால் அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும். அத்தகைய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை ஆசிரியர்கள் எடுப்பார்கள். மறு தேர்விலும் பெயில் ஆனால் அதே வகுப்பில் தான் அந்த மாணவ மாணிவிகள் மேலும் ஒரு ஆண்டு படிக்க வேண்டியிருக்கும்'' என்றார்.

ஏன் இந்த முடிவு?
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ''ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் செய்யும் நடைமுறையால் மாநிலத்தில் கல்வியின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இதை சீர்படுத்தும் வகையில் பாஸ்- பெயில் நடைமுறையை கொண்டுவந்துள்ளோம். இதனால், கல்வியின் தரம் மேம்படும் என்று நம்புகிறோம்'' என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications