For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் முடிவுகள் எதிரொலி.. சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது.. மம்தா பானர்ஜி கருத்து

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மக்களவை தேர்தல் முன்னிலை நிலவரங்கள் மற்றும் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தோல்வியடைந்தவர்கள் எல்லாம் தோற்றவர்கள் என்று அர்த்தம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில், மத்தியில் பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. வாரணாசி தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் மோடி முன்னிலையில் உள்ளார்.

All the losers are not the losers .. Mamtas comforting Twit

மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதாவால் ஒரு இடங்களை கூட பெற முடியாது என்று கர்ஜித்த மம்தாவுக்கு, இந்த தேர்தல் முடிவுகள் பேரிடியாக அமைந்துள்ளது. ஏனெனில் மேற்கு வங்கத்தில் பாஜக, கிட்டத்தட்ட ஆளும் கட்சியை நெருங்கும் வகையில் பல தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 23 இடங்களிலும், பாஜக 17 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

சென்னையில் 3 தொகுதிகளிலும் மநீம செம.. பல தொகுதிகளில் அபாரம்.. மாற்று சக்தியாக மாறும் கமல்ஹாசன்சென்னையில் 3 தொகுதிகளிலும் மநீம செம.. பல தொகுதிகளில் அபாரம்.. மாற்று சக்தியாக மாறும் கமல்ஹாசன்

ஒரு இடம் கூட கிடைக்காது வேண்டுமென்றால் ரசகுல்லா அதாவது பூஜ்ஜியம் தான் பாரதிய ஜனதாவிற்கு கிடைக்கும் என விமர்சித்த மம்தா, தேர்தல் முன்னிலை நிலவரங்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்நிலையில் ட்விட்டரில் தேர்தல் முன்னிலை நிலவரங்கள் குறித்து கருத்து பதிவிட்டுள்ள அவர், பாரதிய ஜனதா என குறிப்பிடாமல் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். ஆனால் தோல்வியடைந்தவர்கள் எல்லாம் தோற்றவர்கள் அல்ல என கூறியுள்ளார்.

மேலும் தேர்தல் முடிவுகள் குறித்து நாங்கள் எங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. ஆய்விற்கு பின்னர் எங்கள் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வோம். விவிபாட் இயந்திரங்களுடன் ஒப்பிட்டு பார்த்த பிறகே வாக்கு எண்ணிக்கை முழுவதும் நிறவைடையும் என குறிப்பிட்டுள்ளார்.

English summary
Chief Minister Mamata Banerjee has commented on the preliminary results and results of the Lok Sabha polls, saying that the defeated losers are not meant to be losers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X