For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமித்ஷா குஜராத் தேர்தலுக்கு வைத்த 'இலக்கு 150'... கிடைத்தது 100 சில்லறைதான்!

குஜராத் சட்டசபை தேர்தலுக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வைத்த வெற்றி இலக்கு 150 என்பது இனி கனவு தானா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது குஜராத் தேர்தல் முடிவுகள்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    குஜராத்தில் மங்கிப் போச்சா மோடி மேஜிக்... வீடியோ

    அஹமதாபாத் : குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி இலக்காக 150ஐ நிர்ணயித்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் கனவு இனி எப்போதும் குஜராத்தில் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் ஆட்சியமைக்க தேவைப்படும் 92 இடங்களை விட பாஜக கூடுதலாக 10 இடங்கள் மட்டுமே பெறும் என்ற நிலையில் தான் தற்போதைய தேர்தல் முடிவுகள் இருக்கின்றன.

    உத்திரபிரதேச தேர்தல் களத்தில் மாபெரும் வெற்றி கண்ட சந்தாஷத்தில் குஜராத் தேர்தலுக்கு மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 150 + இடங்களில் பாஜக வெற்றி பெறுவதற்கான 'மிஷன் 150' மந்திரத்தை பிரயோகிக்கத் தொடங்கினார் அமித்ஷா. ஏனெனில் 2002 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் கூட பாஜக 150க்கு அதிகமான இடங்களில் அசாத்திய வெற்றி பெற்றதே இல்லை என்பது தான் இதற்குக் காரணம்.

    மிஷன் 150க்கான முக்கிய காரணம் 32 ஆண்டு குஜராத் தேர்தல் அரசியல் வரலாற்றை பின்பற்றி நிர்ணயிக்கப்பட்டது. கட3த 1985ல் காங்கிரஸ் மூத்தத் தலைவர் மாதவ் சிங் சோலங்கி தலைமையிலான காங்கிரஸ் கட்சி 149 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. மொத்தமுள்ள 189 இடங்களில் 55.55 சதவீத வாக்குப்பதிவு இது ஆனால் இந்த சாதனை 22 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் பாஜகவால் முறியடிக்க முடியவில்லை.

    1995ம் ஆட்சியை பிடித்த பாஜக

    1995ம் ஆட்சியை பிடித்த பாஜக

    கொஞ்சம் கொஞ்சமாக குஜராத்தில் வளர்ச்சி பெற்ற பாஐக முதன்முதலில் 1995ம் ஆண்டில் 121 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. அதன் பின்னர் 1998 தேர்தலில் 117 இடங்களிலும்,2002 தேர்தலில் 127 இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

    22 ஆண்டுகளில் 127 இடங்களை தாண்டவில்லை

    22 ஆண்டுகளில் 127 இடங்களை தாண்டவில்லை

    தொடர்ந்து 2007 சட்டசபை தேர்தலில் 127 இடங்களிலும், 2012 சட்டசபை தேர்தலில் 116 இடங்களிலுமே வெற்றி பெற்று ஆட்சியை தொடர்ந்து வருகிறது பாஜக. பாஜக தொடர்ந்து 5 முறைகளாக ஆட்சி அமைத்தாலும் வெற்றி என்பது 127ஐத் தாண்டவில்லை. அங்கு வரலாற்று வெற்றியையும் பெற முடியவில்லை. இதனாலேயே இந்த முறை தேர்தலில் 'மிஷன் 150' அறிவிக்கப்பட்டது.

    முன்னேறும் காங்கிரஸ்

    முன்னேறும் காங்கிரஸ்

    இதற்கு ஏற்றாற் போல குஜராத்தில் வளர்ச்சி தாறுமாறாக இருப்பதாக சோஷியல் மீடியாக்களில் பாஜகவால் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதுவே அதன் தேர்தல் தாரக மந்திரமாகவும் மாறிப்போனது. ஆனால் 2017 சட்டசபை தேர்தல் முடிவுகளும் கூட பாஜகவின் கனவை நிறைவேற்றாமலே போய்விட்டது.
    ஆட்சியமைக்கத் தேவைப்படும் பெரும்பான்மையான 92 இடங்களுடன் பாஜக கூடுதலாக 10 இடங்கள் பெற்று 102 முதல் 110 என்ற அளவிலேயே பாஜகவின் வெற்றி என்பது அமைந்திருக்கிறது. அதே சமயம் காங்கிரஸ் கட்சி 1985ல் 149 இடங்களை வென்றதே தவிர அதன்பிறகு வந்த தேர்தல்கள் அனைத்திலும் 60 என்ற இலக்கை தாண்டவில்லை.

    பாஜகவின் செல்வாக்கு

    பாஜகவின் செல்வாக்கு

    ஆனால் நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலானது காங்கிரஸ் கட்சி அங்கு மீண்டும் ஏற்றம் கண்டு வருகிறது என்பதையும், மக்கள் மத்தியில் பாஜகவின் செல்வாக்கு குறைகிறது என்பதையுமே காட்டுகிறது. பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தாலும் இனி எப்போது இந்த இலக்கு 150ஐ நெருங்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.

    English summary
    Amith Shah's Mission 150 not possible in Gujarat, why he set target for 150 plus seats here is the story of Gujarat's 32 years of political history
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X