For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசி குடும்பத்திற்கு பயந்து மறைத்து வளர்த்தார் ஜெ... பெங்களூரு பெண் அம்ருதா திடுக் தகவல்கள்!

சென்னைக்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்த போதெல்லாம் அவர் தன்னிடம் நீ உயிரோடு இருந்தால் போதும் என்று கூறியதாக பெங்களூரைச் சேர்ந்த பெண் அம்ருதா திடுக் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    சசி குடும்பத்திற்கு பயந்து மறைத்து வளர்த்தார் ஜெ..-அம்ருதா- வீடியோ

    டெல்லி : சென்னைக்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்த போதெல்லாம் அவர் தன்னை கட்டித் தழுவி தாயன்போடு முத்தமிட்டதாக பெங்களூருப் பெண் அம்ருதா தெரிவித்துள்ளார். தன்னிடம் நீ உயிரோடு இருந்தால் போதும் என்று கூறியதாகவும் அம்ருதா பல திடுக் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

    ஜெயலலிதாவின் மகள் தான் தான் என்று உரிமை கோரி பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் உச்சநீதிமன்றத்தை நாடினார். முகச்சாயலில் ஜெயலலிதா போலவே இருக்கும் அம்ருதா தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்துள்ளார்.

    அதில் தனக்கும் ஜெயலலிதாவிற்குமான உறவு குறித்த பல தகவல்களை அம்ருதா வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது : ஜெயலலிதா என்னுடைய பெரியம்மா என்று தான் நான் நினைத்திருந்தேன், என்னை வளர்த்த அம்மா ஷைலஜா அவருக்கு தங்கை முறை. அவரிடம் தான் நான் வளர்ந்தேன், ஷைலஜா அம்மா சொல்லித் தான் ஜெ.ஜெ அம்மா பெரியம்மா என்பது தெரியும்.

    அம்மா உணர்வு

    அம்மா உணர்வு

    சென்னையில் நான் அவரை சந்தித்த போது எங்கள் இருவருக்கும் இடையே நல்ல பாசம் இருந்தது. என்னை கட்டித் தழுவி முத்தமிட்டார், எல்லாமே அம்மா என்ற உணர்வோடு தான் இருந்தது.

    உயிரோடு இருந்தால் போதும்

    உயிரோடு இருந்தால் போதும்

    அவர் இறந்துவிட்ட நிலையில் நான் இப்போது அந்த பாசத்தை உணர்கிறேன். அவர் தான் என்னுடைய தாய் என்று நான் நினைக்கிறேன். ஜெயலலிதாவை பார்க்கும் போதெல்லாம் அவர் என்னிடம் நீ உயிரோடு இருந்தால் போதும், முதலில் இங்கிருந்து போய்விடு என்று தான் சொல்வார். அந்த அளவிற்கு என்னை மூடி மறைத்து தான் வளர்த்தார்கள்.

    வைஷ்ணவ முறைப்படி தகனம்

    வைஷ்ணவ முறைப்படி தகனம்

    சசிகலா குடும்பத்தினரிடம் இருந்து மிரட்டல்கள் வருவதால் தான் என்னை மூடி மறைத்து வளர்த்திருக்கிறார்கள். ஸ்ரீவைஷ்ணவாஸ் முறைப்படி உடலை தகனம் செய்ய வேண்டும் அதைத் தான் நான் நீதிமன்றத்திடம் கேட்டுள்ளேன்.

    உயர்நீதிமன்றத்தில் வழக்கு

    உயர்நீதிமன்றத்தில் வழக்கு

    விரைவில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். ஜெயலலிதா உடலைத் தோண்டி எடுத்து மரபணு சோதனை செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில் தொலைக்காட்சிகளுக்க அவர் அளித்துள்ள பரபரப்பு பேட்டியில் பல திடுக் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

    English summary
    Bangalore girl Amrutha who is claiming daughter of Jayalalitha says that beccause of threats from Sasikala family JJ hided her and also adds she is brought with Jayalalitha's sister Shailaja.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X