For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சந்திரபாபு நாயுடுகாரு! உங்களுக்கு வயசாகுது.. வீட்டில் ரெஸ்ட் எடுங்கள்! அமைச்சர் ரோஜா அட்வைஸ்

Google Oneindia Tamil News

குண்டூர்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வயதாகிவிட்டதால் அவர் வீட்டில் ஓய்வெடுத்தால் அவருடைய உடல்நலனுக்கு நல்லது என நடிகையும் அமைச்சருமான ரோஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்த நாள் விழா வரும் டிசம்பர் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக தற்போதே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் ஜெகன்மோகனின் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நகரி தொகுதி எம்எல்ஏவும் சுற்றுலா துறை அமைச்சருமான நடிகை ரோஜா கலந்து கொண்டார்.

ஜடேஜாவுக்கு தடையா? இந்திய ஜெர்சியுடன் பாஜக பிரச்சாரம்! பிசிசிஐக்கு தர்ம சங்கடம் - வலுக்கும் புகார் ஜடேஜாவுக்கு தடையா? இந்திய ஜெர்சியுடன் பாஜக பிரச்சாரம்! பிசிசிஐக்கு தர்ம சங்கடம் - வலுக்கும் புகார்

தெலுங்கு தேசம்

தெலுங்கு தேசம்

அப்போது அவர் பேசுகையில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வயதாகிவிட்டது. எனவே அவர் இதற்கு மேல் அரசியலில் ஈடுபடாமல் வீட்டில் ஓய்வெடுப்பதுதான் அவருக்கு நல்லது, அவருக்கு மட்டுமல்ல மாநில மக்களுக்கும் அதுதான் நல்லது. மங்களகிரியில் நடந்த மீன்- இறால் வளர்ப்பு விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர்

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர்

அவர் அந்த கூட்டத்தில் "ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் மீன்களுக்கு வழங்கப்படும் உணவுகள் மீது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு ஜெட் வரி விதித்துள்ளது, இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுவிட்டதாக பேசியிருந்தார்". நான் கேட்கிறேன், சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த வரை மீன்- இறால் வளர்ப்பு விவசாயிகளுக்கு என்ன செய்துவிட்டார்?

நன்மை செய்யாமல்

நன்மை செய்யாமல்

அவர் எந்த நன்மையையும் செய்யாமல் தற்போது எதிர்க்கட்சியாக இருப்பதாலேயே ஆளும் கட்சியை குறை சொல்லி வருகிறார். ஆந்திராவில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெறும். மீண்டும் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பார் என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.

மங்களகிரி

மங்களகிரி

மங்களகிரியில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேச்சுக்கு நடிகை ரோஜா கொடுத்த பதிலடியாகவே பார்க்கப்படுகிறது. நடிகை ரோஜா கலைத்துறையில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். அது போல் அரசியலில் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என விரும்பிய ரோஜா கடந்த 2004 ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான நகரியில் போட்டியிட்டார்.

2009 ஆம் ஆண்டு ரோஜா தோல்வி

2009 ஆம் ஆண்டு ரோஜா தோல்வி

அந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தோல்வி அடைந்தது. அது போல் ரோஜாவும் தோற்றார். பின்னர் 2009ஆம் ஆண்டு ரோஜாவுக்கு, சந்திரபாபு நாயுடுவின் சந்திரகிரி தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில் பம்பரமாக ரோஜா களப்பணியாற்றியிருந்தாலும் சொந்த கட்சியினர் எதிர்க்கட்சிகளுக்கு பணியாற்றியதால் ரோஜா தோற்றார். பின்னர் அவரது தொடர் தோல்வியை சொல்லாமல் சொல்லி அவர் ஓரம்கட்டப்பட்டார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் ரோஜா

ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் ரோஜா

இதையடுத்து தனது திறமையை மதிக்காத இடத்தில் இருக்க மனம் ஒவ்வாத ரோஜா, ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை இழிவுப்படுத்திய சந்திரபாபு நாயுடுவை விமர்சித்து பேசினார். பின்னர் நகர் தொகுதியில் போட்டியிட்டார்.

நகரி மக்களுக்காக

நகரி மக்களுக்காக

நகரி தொகுதியில் மக்களுக்காக பல பணிகளை செய்தார். மக்கள் பணியாற்ற ஆந்திராவில் எத்தனையோ மெட்ரோ பாலிட்டன்கள் இருந்த போதிலும் நகரி தொகுதியில் வீடு கட்டி அங்கேயே தங்கியுள்ளார். 15 ஆண்டுகளாக பெரும் பின்னடைவை சந்தித்த ரோஜாவுக்கு நகரி தேர்தல் வெற்றி ஒரு பிடிப்பை கொடுத்தது. பின்னர் 2014 ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக தேர்வு செய்யப்பட்டது. அப்போது ரோஜா எதிர்க்கட்சியாக சந்திரபாபு ஆட்சியை கிழித்து தொங்கவிட்டார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி

பின்னர் 2019ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. அப்போதே ரோஜா அமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆகவில்லை. அவருக்கு 3 ஆண்டுகள் கழித்து அமைச்சரவை மாற்றத்தின் போது சுற்றுலா துறை கிடைத்துள்ளது. சினிமாவை போல் அரசியலிலும் ஒரு நல்ல உயரத்தை அடைய ரோஜா கடின உழைப்பையும் தாண்டி பல்வேறு அவமானங்களையும் அதிர்ச்சிகளையும் பெற்றுள்ளார் என்பதை மறுக்க முடியாது.

English summary
Andhra Pradesh Tourism department minister R.K.Roja (a) Roja Selvamani criticises Chandrababu Naidu that he is getting aged.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X