மரணத்துக்குப் பின் வெற்றி.. மாரடைப்பால் உயிரிழந்த ஜனசேனா வேட்பாளர் திவ்யா உள்ளாட்சி தேர்தலில் வெற்றி

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்த இளம் பெண் வேட்பாளர் திவ்யா நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றார்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவரபள்ளி மண்டலம் துமன்டுனிகுடம் மண்டல பரிஷத் தேர்தலில் ஜனசேனா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட கர்பதி திவ்யா (28) நேற்று முந்தினம் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையின்போது தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரைவிட 350 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Andhra Jana Sena Party MPTC Candidate Dies of Cardiac Arrest Hours Before Vote Counting

பட்டப்படிப்பு முடித்துள்ள திவ்யா, ஸ்ரீனிவாஸ் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 5 வயது மகன் மற்றும் 3 மாத ஆண் குழந்தை உள்ளது. கடந்த 5ஆம் தேதி மண்டல பரிஷத் தேர்தலில் வாக்களித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு வயிற்று வலி ஏற்பட்டதால் திவ்யா தேவரபள்ளியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை குடும்பத்தினர் ராஜமுந்திரியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நிலை சீராக இருந்ததால் அவரை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை மீண்டும் வலி ஏற்பட்டதால் திவ்யாவை, அவரது குடும்பத்தினர் ராஜமுந்திரியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், துமந்துனிகுடம் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் திவ்யா, 350 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தலுக்கு முன்பு வேட்பாளராக போட்டியிட்டு தீவிரமாக பிரசாரம் செய்த கர்பதி திவ்யா வெற்றியின் மகிழ்ச்சியைக் காணாமல் இறந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்பதி திவ்யா குடும்பத்தினருக்கு ஜனசேனா கட்சி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+