நானே கருப்பு! குழந்தை எப்படி சிவப்பு? பச்சிளம் குழந்தை உயிரைப் பறித்த சந்தேகம்! அதிர்ந்த ஆந்திரா!
அமராவதி : ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அருகே குழந்தை சிவப்பாகப் பிறந்ததால் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட கணவன் 6 மாத பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் பூட்டால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நாகரீகம் வெகுவாக வளர்ந்து விட்ட இந்த காலத்தில் கணவன் மனைவிக்கிடையே சந்தேகம் எனும் நெருப்பு சிறு பொறியாக பற்றினாலும் மொத்த வீட்டை எரிக்கும் அளவுக்கு அதன் தீவிரம் அதிகமாக இருக்கும்.
கணவன் மீது மனைவிக்கும், மனைவி மீது கணவனுக்கு சந்தேகம் வந்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த வகையில்தான் ஆந்திர மாநிலத்தில் மனைவியின் மீதான சந்தேகத்தால் பச்சிளம் குழந்தை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவில் அதிர்ச்சி
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அருகே ஆர்வக் கல்லு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ரங்கா முரளி என்பவருக்கும் வீணா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன நாள் முதலே , வீணாவுக்கும் ரங்கா முரளிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது தன்னைவிட மனைவி அழகாக இருப்பதால் ஆத்திரத்தில் இதுபோன்று ரங்கா ஈடுபடுவதாக அப்போது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரையும் அழைத்து காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

மனைவி மீது சந்தேகம்
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தம்பதியினருக்கு முனி வர்ஷா என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து ரங்காவும் அவரது மனைவி வீணாவும் நல்லூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். நாளுக்கு நாள் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட ரங்கா தான் கருப்பாக இருக்கிறேன். ஆனால் பிறந்த குழந்தை எப்படி சிவப்பாக இருந்தது இதனால் அந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என கூறி சண்டையிட்டு வந்துள்ளார்.

கொடூர கொலை
மேலும் அருகில் ஏராளமானோர் வீட்டருகே வசிக்கும் நிலையிலும் வேண்டுமென்றே தனது மனைவியின் நடத்தை குறித்து சந்தேகமாக பேசியும் அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தலைக்கேறிய மது போதையில் வீட்டுக்கு வந்த ரங்கா தனக்குப் பிறக்காத குழந்தை உயிருடன் இருக்கக் கூடாது எனக்கூறி குழந்தையின் தலையில் வீட்டில் இருந்த பூட்டை எடுத்து ஓங்கி அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த குழந்தை ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த நிலையில் மனைவியையும் முரளி கொலை செய்ய முயன்றுள்ளார்.

தந்தை கைது
இதையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அருகில் வசித்த மக்கள் குழந்தை இறந்தது கண்டு அதிர்ச்சியடைந்து காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர் இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் முரளி ரங்காவை கைது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாகவும், குழந்தை தன்னுடைய சாயலிலும் இல்லை, தன்னுடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் சாயலிலும் இல்லை எனவே அதனை கொலை செய்தேன் என்று கூறியுள்ளார். இச்சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications