For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செம்மரக் கடத்தல் வழக்கில் புதிய திருப்பம்.. சீனாவைச் சேர்ந்த யாங் பிங் கைது!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் வழக்கில் புதிய திருப்பமாக சீனாவைச் சேர்ந்த யாங் பிங் என்பவரை அந்த மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத்தில் வைத்து இந்த சீனர் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். அவரைப் பின்னர் சித்தூர் மாவட்ட போலீஸார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

AP police arrest Chinese national in red sanders smuggling

கைது செய்யப்பட்ட சீனர் குறித்த விரிவான தகவல்களை போலீஸார் தரவில்லை. ஆனால் செம்மரக் கடத்தல் ஆந்திராவைச் சேர்ந்த உள்ளூர் கும்பல்களோடு சீனக் கும்பல்களும் இணைந்திருப்பது உறுதியாகியுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு முதல் செம்மரக் கடத்தல் தொடர்பாக 55 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் சித்தூர் வனப்பகுதியில் 20 தமிழர்களை ஆந்திர போலீஸார் சுட்டுக் கொலை செய்த பிறகு இந்த வழக்கை திடீரென வேகம் எடுத்துள்ளது ஆந்திர போலீஸ்.

ஆந்திராவிலிருந்து வெட்டி எடுக்கப்படும் செம்மரங்கள், சீனா, மியான்மர், ஜப்பான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அதிக அளவில் கடத்தப்படுவது குறிப்பிடத்தகக்து. ஒரு டன் செம்மரம் ரூ. 20 முதல் 25 லட்சம் வரை சர்வதேச சந்தையில் விலை போகிறது என்பது நினைவிருக்கலாம்.

English summary
The Andhra Pradesh police have arrested a Chinese national alleged of smuggling red sanders logs. The Chinese man identified as Yang Ping was arrested by the police in Hyderabad, late on Thursday night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X