குஜராத்தில் பாஜக ஆட்டம் க்ளோஸ்.. இனி எங்க ராஜ்ஜியம் தான்.. உளவுத்துறையே சொல்லிட்டு..கெஜ்ரிவால் பளீச்
அகமதாபாத்: குஜராத்தில் இன்று தேர்தல் நடந்தால் கூட ஆம் ஆத்மி தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் இதனால் பாஜக அங்கு ஆட்சி அமைக்காது என்றும் உளவுத்துறையின் அறிக்கையை வைத்து அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது. பஞ்சாபில் ஆட்சி அமைத்த உற்சாகத்துடன் குஜராத் பக்கமும் தனது கவனத்தை கெஜ்ரிவால் திருப்பியிருக்கிறார்.
குஜராத்தில் 24 ஆண்டுகளாக ஆட்சி அரியணையில் இருக்கும் பாஜகவை வீழ்த்த அனல் பறக்கும் பிரசாரங்களை அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில வாரங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டார்.

மும்முனை போட்டி
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜகவை அசைத்து பார்க்க வியூகம் வகுத்து வரும் கெஜ்ரிவால், இதற்காக அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகவ் சதாவை பொறுப்பாளராக நியமித்து காய் நகர்த்தல்களை தொடங்கியிருக்கிறார். இதனால் குஜராத்தில் இந்த முறை மும்முனை போட்டி இருக்கப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மூன்று கட்சிகளும் தற்போதே தேர்தல் பணியை துவங்கி தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

வாட்டர் பாட்டில் வீசப்பட்டது
அதிலும், ஆம் ஆத்மி ஒருபடி மேலே போய் அனல் பறக்கும் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. அடிக்கடி குஜராத் பயணம் மேற்கொள்ளும் அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். அந்த வகையில், இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அங்கு பிரசாரம் மேற்கொண்டர். இன்றும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கெஜ்ரிவால் பங்கேற்றுள்ளார். அந்த வகையில் நேற்று கெஜ்ரிவால் ராஜ்கோட்டில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்ற போது கெஜ்ரிவாலை நோக்கி வாட்டர் பாட்டில் வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆம் ஆத்மி தான் வெற்றி பெறும்
இப்படி குஜராத்தில் தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி வரும் சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால் கூறியதாவது:- குஜராத்தில் இன்று தேர்தல் நடந்தால் கூட ஆம் ஆத்மி தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று உளவுத்துறையின் அறிக்கை கூறுகிறது. இருந்தாலும் சிறிய அளவிலான வெற்றிதான் கிட்டும் என்று உளவுத்துறை அறிக்கை கூறுகிறது. எனவே, குஜராத் மக்கள் பெருமளவு ஆதரவு அளிக்க வேண்டும். அப்போது தான் பெரும்பான்மையை எளிதில் தாண்டி ஆட்சியை பிடிக்க முடியும்.

பாஜக அதிர்ச்சி
உளவுத்துறை அறிக்கையை பார்த்ததில் இருந்தே அதிர்ச்சி அடைந்த பாஜக - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கைகோர்த்து உள்ளன. குறிப்பாக பெரும் பதற்றம் அடைந்துள்ள பாஜக, காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது. அப்போது தான் எதிர்ப்பு வாக்குகள் பிரியும் என்பது பாஜகவின் திட்டம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications